ஜெயலலிதாவுக்காக விட்டுக்கொடுத்த சிவாஜி.. நடிக்காம இருந்தாலும் நடிகர் திலகம்தான்...

by சிவா |   ( Updated:2023-12-11 06:15:33  )
sivaji
X

திரையுலகில் பல நடிகர்கள் வருகிறார்கள்.. போகிறார்கள். ஆனால், நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே. சிறு வயது முதல நாடகங்களில் பல வேடங்களிலும் நடித்தவர் என்பதால் நடிப்பு என்பது அவருக்கு மிகவும் சுலபமான ஒன்றாக அமைந்துவிட்டது.

ஹாலிவுட்டில் மட்டும் பிறந்திருந்தால் நடிகர் திலகம் உலக புகழை பெற்றிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹாலிவுட்டின் பெரிய நடிகர்களான மார்லன் பிராண்டாவே சிவாஜியை போல நடிக்க முடியாது என ஒருமுறை சொன்னார். சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தியவர். ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, திருடன், போலீஸ், வழக்கறிஞர், மருத்துவர், கடவுள் அவதாரங்கள், சரித்திர புருஷர்கள், இலக்கியத்தில் வந்த கதாபாத்திரங்கள் என ஒன்றையும் அவர் விட்டு வைக்கவில்லை.

இதையும் படிங்க: எம்ஜிஆரை கிண்டலடித்த சிவாஜி.. பதிலுக்கு புரட்சித்தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

அதனால்தான் அவருக்கு நடிகர் திலகம் என பட்டம் வந்தது. வயதுக்கு ஏற்ற கதாபத்திரங்களில் நடித்து தொடர்ந்து சினிமாவில் நீடித்து வந்தர். ரஜினியுடன் படிக்காதவன், விடுதலை, விஜயுடன் ஒன்ஸ்மோர், கமலுடன் தேவர் மகன், படையப்பா என பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர் இவர்.

சிவாஜி நடித்து நாம் பார்த்திருப்போம். ஆனால், நடிக்காமல் இருப்பதும் நடிப்புதான் என அவர் அனுபவத்தில் பல சம்பவங்கள் நடந்துள்ளது. இருவர் உள்ளம் படத்தில் ஒரு காட்சியில் சரோஜாதேவி மட்டுமே நடிக்க வேண்டும். சிவாஜி எதுவும் செய்யாமல் அப்படியே நிற்க வேண்டும். மாறாக அந்த காட்சியில் சிவாஜி நடித்துவிட்டால் படமே கெட்டுவிடும் என இயக்குனர் எல்.வி.பிரசாத் சொன்னதும் சிவாஜியும் அப்படியே நடித்தார்.

அதேபோல், எங்கிருந்தோ வந்தாள் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஜெயலலிதா மட்டுமே நடித்து கொண்டிருப்பார். சிவாஜி தனது இடது கையை கன்னத்தில் வைத்து சிரித்தபடி நின்றுகொண்டிருப்பார். ஜெயலலிதா அழைக்கும் இடத்திற்கெல்லாம் போவார். சிவாஜி நடித்திருக்கவே மாட்டார். அவர் நடித்திருந்தால் படமே கெட்டு போயிருக்கு. இதை நடிகர் திலகமே ஒரு பேட்டியில் சொல்லி ‘படத்தின் தலைப்பு எங்கிருந்தோ வந்தாள் தானே.. எங்கிருந்தோ வந்தான் இல்லையே’ என சிரித்தார்.

நடிக்காமல் இருந்தாலும் அவர் நடிகர் திலகம்தான்....

இதையும் படிங்க: சிவாஜியையே ஓவர்டேக் செய்த அசத்தலான நடிப்பு!.. அந்த படத்திலிருந்து டேக் ஆப் ஆன சந்திரபாபு!..

Next Story