எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?.. தவில் வாசித்து பிரபல நடிகைக்கு குடைச்சல் கொடுத்த பாலையா!..
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக உழைப்பை தந்தவர் நடிகர் டி.எஸ்.பாலையா. நாடகத்தின் மீதுள்ள ஆர்வத்தால் முதலில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். தலைசிறந்த நடிகரான பாலையாவுக்கு ‘ஊட்டி வரை உறவு’, ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற படங்கள் முக்கிய படங்களாக அமைந்தன. எம்ஜிஆரின் முதல் படமான சதிலீலாவதி படம் தான் பாலையாவுக்கும் முதல் படமாக அமைந்தன. ஆரம்பத்தில் வில்லனாக நடித்த பாலையா அதன் பின் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தார். இவரின் கிண்டலான பேச்சும் அசாத்திய நடிப்பும் […]
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக உழைப்பை தந்தவர் நடிகர் டி.எஸ்.பாலையா. நாடகத்தின் மீதுள்ள ஆர்வத்தால் முதலில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். தலைசிறந்த நடிகரான பாலையாவுக்கு ‘ஊட்டி வரை உறவு’, ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற படங்கள் முக்கிய படங்களாக அமைந்தன.
எம்ஜிஆரின் முதல் படமான சதிலீலாவதி படம் தான் பாலையாவுக்கும் முதல் படமாக அமைந்தன. ஆரம்பத்தில் வில்லனாக நடித்த பாலையா அதன் பின் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தார். இவரின் கிண்டலான பேச்சும் அசாத்திய நடிப்பும் மக்களை ரசிக்க வைத்தது.
மேலும் அவர் நடித்த படங்களிலேயே தில்லானா மோகனாம்பாள் படம் காலத்தால் என்றும் அழியாதவை. அதிலும் குறிப்பாக கதாநாயகியின் அம்மாவிடம் ரயிலில் அவர் பண்ணும் லொள்ளு அனைவரையும் சிரிக்க வைத்தது.
அந்த படத்தில் பாலையா தவில் வாசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்காக சில காலம் தவில் வாசிக்கும் பயிற்சியும் பெற்றிருக்கிறார். வீட்டில் பயிற்சி பெறுவதற்காக தனியாக தவில் ஒன்றும் வாங்கி வைத்திருந்தாராம். தினமும் அந்த தவிலை வாசித்து ஏதோ தட்டிக் கொண்டே இருப்பாராம் வீட்டில்.
இதையும் படிங்க : ஃபுல் மப்பில் அறைக்கதவை திறக்காத கார்த்திக்.. அவரின் மனைவி என்ன செய்தார் தெரியுமா?..
அதனால் பக்கத்தில் இருந்தவர்களும் போச்சுடா ஆரம்பிச்சிட்டாரு என்று சொல்லுமளவிற்கு அக்கப்போரு பண்ணியிருக்கிறார். அந்த நேரத்தில் பாலையா வீட்டின் அருகே நடிகை வசந்தா குடியிருந்தாராம். பாலையாவின் தவில் வாசிக்கும் சப்தத்தால் நிறைய வேதனைகளை அடைந்திருக்கிறார் என்று இந்த தகவலை கூறிய ஆலங்குடி வெள்ளச்சாமி என்பவர் தெரிவித்தார்.
மேலும் இதே நடிகை வசந்தா தான் விஜயகாந்த் நடித்த ‘ நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் விஜயகாந்திற்கு அம்மாவாக நடித்தார் என்பது குறிப்படத்தக்கது.