சோசியல் மீடியாவில் விஜய் பாக்குற ஒரே பேஜ் இதுதானாம்! குசும்புக்கார தளபதியா இருக்காரே

by Rohini |   ( Updated:2023-11-05 09:23:06  )
vijay
X

vijay

Actor Vijay: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகும் போது அந்த நடிகர் காலப்போக்கில் ரசிகர்களுக்கு தலைவனாகவே மாறி விடுகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் தன் தலைவனுக்கு எது பிடிக்கும்? என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுவார்? இந்த நேரத்தில் எப்படி இருப்பார்? என்ற யோசனையிலேயே மூழ்கும் நிலைமைக்கு ரசிகர்கள் தள்ளப்படுகிறார்கள்.

உதாரணமாக சொன்னால் இன்று விஜயின் இன்ஸ்டா பக்கத்தில் நடந்து முடிந்த லியோ வெற்றிவிழா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் பதிவிடப்பட்டன. அதை பார்த்த மாத்திரத்தில் கிட்டத்தட்ட 1 மில்லியன் வீயுவ்ஸ் போயிருக்கிறது.

இதையும் படிங்க: இழவு வீட்டுல என்ன ரொமான்ஸ்!.. தல தளபதி சலூனையே ஓவர்டேக் செய்த சந்தானம்.. பில்டப் டீசர் எப்படி இருக்கு?

ஒரு சாதாரண புகைப்படம்தான் அது. அதற்கு எப்பேற்பட்ட வரவேற்பு என்று இதை பார்க்கும் போதே விஜய் மீது எந்தளவு வெறியாக இருக்கிறார்கள் என தோன்றுகிறது. பொது இடங்களில் பார்த்தாலும் என்னமா டிரஸ் போட்டிருக்கிறார்? என்ற வியப்பைத்தான் நம்முள் ஏற்படுத்துகிறது.

நடிகர் என்பதையும் தாண்டி அவர்களும் ஒரு சாதாரண மனிதர்கள் என்று ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கடவுளை பார்க்கிற மாதிரி நடிகர்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் விஜய் எந்த மாதிரியான விஷயத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் என்ற ரகசியத்தை லியோ பட நடிகை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு ஜப்பான் வருது!.. அடுத்து கார்த்தியை வம்பிழுப்போம்.. பக்காவா ரூட்டு போட்ட ப்ளூ சட்டை மாறன்!

அவர் வேறு யாருமில்லை. பிக்பாஸ் ஜனனிதான். லியோ படப்பிடிப்பில் இருக்கும் போது விஜய் மீம்ஸ்களை பற்றித்தான் பேசுவாராம். சமீபத்தில் கூட ஒரு மீம்ஸை படித்து கலகலவென சிரித்தார் என்று ஜனனி கூறினார். அவருடன் த்ரிஷாவும் சேர்ந்து எப்படி இப்படியெல்லாம் மீம்ஸ்கள் கிரியேட் பண்ணுகிறார்கள் என்று வியப்புடன் பேசிக் கொள்வார்களாம்.

மீம்ஸ்களில் தமிழ் மீம்ஸ் பேஜ்ஜைத்தான் அதிகமாக பார்ப்பாராம் விஜய். சோசியல் மீடியாவில் இந்த மீம்ஸ் பேஜ்ஜைத்தான் அதிகம் பார்த்து சிரிப்பார் என ஜனனி கூறினார்.

இதையும் படிங்க:கம்பேக் கொடுக்கப் போறாரா கார்த்திக் சுப்புராஜ்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லர் தரமா இருக்கே!..

Next Story