சென்சார் பண்ண பல லட்சம் புடுங்கிட்டாங்க!. ஆதாரத்தோடு பொங்கும் விஷால்.. நடந்தது இதுதான்!..

by சிவா |
vishal
X

Mark Antony: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் விஷால். திமிறு, சண்டக்கோழி, இரும்புத்திரை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். நடிகராக மட்டுமில்லாமல் அவர் நடிக்கும் பல திரைப்படங்களை இவரே தயாரித்தும் இருக்கிறார். தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தவர்.

கடந்த சில வருடங்களாகவே இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தோல்வி அடைந்தன. ஆனால், சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கூசும்ப்ஸ்.. வெறித்தனம்!.. வெளியானது லியோ பட ‘பேடாஸ்’ பாடல் வீடியோ..

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி பதிப்பை வெளியிட தணிக்கை சான்றிதழை பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது என சொல்லி பரபரப்பை கிளப்பியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் ‘திரைப்படங்களில் லாஞ்சம் வாங்குவது போல் காட்சிகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நிஜ வாழ்வில் அதை ஏற்க முடியாது. அதுவும் அரசு அலுவலகங்களில்.. மும்பை தணிக்கை துறை அலுவலகத்தில் இது நடக்கிறது.

மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி பதிப்பை வெளியிட ரூ.6.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. என் சினிமா வாழ்க்கையில் இப்படி ஒன்று இதுவரை நடந்ததே இல்லை. இன்று படம் வெளியாக வேண்டியிருந்ததால் வேறுவழியில்லாமல் மேனகா என்கிற புரோக்கரிடம் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.

இதையும் படிங்க: ரசிகர்களை காப்பாத்த இறைவன்தான் வரணும்! – ஜெயம் ரவின் ‘இறைவன்’ பட விமர்சனம் இதோ!…

இதை மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். என் போன்ற தயாரிப்பாளர்களின் எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டுமா?’ என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 3 லட்சம் மற்றும் 3.5 லட்சம் என இரண்டு முறை பணம் அனுப்பிய வங்கி விபரங்களையும் எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

twitt

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைக்க ரெடியாகும் பாலா… அப்போ தயாரிப்பாளர் தலைல துண்டுதானா…

Next Story