கடவுளே கமல் சார் சீக்ரம் வந்திடனும்.... ஒரே நாளில் நாக்கு தள்ளவைத்த ராஜாமாதா!
மக்களை திருப்திப்படுத்தாத பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் ரம்யா கிருஷ்ணன்!
பிக்பாஸ் முதல் சீசன் முதல் 5 வது சீசன் வரை கமல் ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக்பாஸில் மட்டும் தான் இப்படி நடக்கிறது. இதன் மூலம் கோடி கணக்கில் பணம் சம்பாதித்திருக்கும் கமல் தொடர்ந்து ஆடியன்ஸின் பேவரைட் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இப்படியான நேரத்தில் கமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் டிவி ஒரு முடிவெடுத்தது.
இதையும் படியுங்கள்: மாநாடு இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முதல் முறை பாக்ஸ் ஆபிஸில் இணைந்த சிம்பு படம்…..
ஆம், நடிகை ரம்யா கிருஷ்ணனை கமலுக்கு பதிலாக நிகழ்ச்சி தொகுப்பிளாராக கொண்டு வந்துள்ளனர். நீலாம்பரி போட்டியாளர்களை வெளுத்து வாங்குவார் என பார்த்தால் பம்பியபடி பேசி ஒரே நாளிலே பிக்பாஸ் ஆடியன்ஸை கதற வைத்துவிட்டார். ஆண்டவரே சீக்கிரம் திரும்ப வந்துடுங்க என ஆடியன்ஸ் கதறிவிட்டனர்.