இப்படி காட்டித்தான் வாய்ப்பு தேடினயா?!...சமந்தாவை இப்படி பார்த்திருக்க மாட்டீங்க மக்களே....
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது.
தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். தெறி, மெர்சல், கத்தி, இரும்புத்திரை, தங்க மகன், நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இடையில் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலில் அசத்தலான கவர்ச்சி காட்டி நடனம் ஆடியிருந்தார்.
தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.
இதையும் படிங்க: கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தரா.! சீக்கிரம் திருமண தேதியை சொல்லுங்க.,
தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.
இந்நிலையில், அவர் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.