காதலை ஏற்க மறுத்த நவரச நாயகன்… தற்கொலை செய்யப்போன அந்த பிரபல நடிகை… இப்படி எல்லாம் நடந்திருக்கா??

by Arun Prasad |
Karthik
X

Karthik

நவரச நாயகன் என்று புகழப்படும் கார்த்திக், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து “நினைவெல்லாம் நித்யா”, “ஆகாய கங்கை” போன்ற பல திரைப்படங்களில் நடித்த கார்த்திக், அக்கால இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார்.

அவரது பாடிலேங்குவேஜ்ஜும் வசனம் பேசும் ஸ்டைலும் ரசிகர்கள் பலரை கவர்ந்திழுத்தது. மேலும் அக்காலகட்டத்தில் கார்த்திக் தமிழ் சினிமாவின் “பிளே பாய்” ஆக திகழ்ந்தார் என சினிமாத் துறையை சேர்ந்த பலரும் கூறுவார்கள். அந்த அளவுக்கு நடிகைகள் பலரும் அவரது அழகுக்கு மயங்கிப்போனார்களாம்.

Karthik

Karthik

இந்த நிலையில் தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஒருவர் நவரச நாயகன் கார்த்திக்கை திருமணம் செய்ய விருப்பப்பட்டதாகவும், அந்த காதலை கார்த்திக் ஏற்க மறுத்ததால் அந்த நடிகை தற்கொலை செய்ய முடிவெடுத்தார் எனவும் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

“பல நடிகைகள் கார்த்திக்கின் மேல் வந்து விழுந்தனர். கார்த்திக் அவராக சென்று எந்த நடிகையிடமும் தவறாக நடந்துகொண்டது கிடையாது. அந்த அளவுக்கு அழகானவராக திகழ்ந்தார் கார்த்திக்” என அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: “சமந்தாவின் கடைசி படம் இதுதான்?”… திடீரென எடுத்த முடிவால் ஷாக் ஆன ரசிகர்கள்…

Sripriya

Sripriya

மேலும் பேசிய அவர் “மூத்த நடிகையான ஸ்ரீபிரியா கார்த்திக்கை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தி வந்தார். ஆனால் கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். ஆதலால் ஸ்ரீபிரியா தற்கொலை செய்துகொள்ளப்போனார். இந்த செய்தி அன்றைய பத்திரிக்கைகளிலேயே வெளிவந்தது.

தற்கொலை முயற்சியில் இருந்து மீண்டு வந்த நடிகை ஸ்ரீபிரியா, அதன் பின் ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது அவரது குடும்பத்துடன் நன்றாக வாழ்ந்து வருகிறார்” என அந்த வீடியோவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story