அந்த நடிகையா வேண்டவே வேண்டாம்... ஓரம் கட்டும் தயாரிப்பாளர்கள்....

by சிவா |
actress
X

பெரிய முதலாளி ரியாலிட்டி ஷோ மூலம் சின்னதிரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் அவர். அந்த நிகழ்ச்சியின் போது சக நடிகர் நடத்திய காதல் டிராமாவில் இவர் சிக்கினார். இருப்பினும் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் இருவரும் நண்பர்கள் என கூறி பிரிந்து விட்டனர்.

சரி! நாம் விஷயத்திற்கு வருவோம். ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் அந்த நடிகைக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. அவரும் வருங்காலத்தில் நாம்தான் கோலிவுட்டில் டாப் நடிகை என்றெல்லாம் கனவு காண தொடங்கினார். இந்த மகிழ்ச்சி எல்லாம் அந்த நடிகையின் முதல் படம் வெளியாகும் வரை மட்டுமே நீடித்தது.

அந்த நடிகையின் முதல் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.

முதல் படமே தோல்வியை சந்தித்ததால் தற்போது அவரின் கைவசம் உள்ள படங்களை தவிர வேறு எந்த ஒரு புதிய பட வாய்ப்பும் வரவில்லையாம். இனியும் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள்.

காரணம் அந்த நடிகையை போலவே ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட வேறு சில இளம் நடிகைகள் தற்போது கோலிவுட்டில் களமிறங்கி உள்ளதால், இனி அந்த நடிகை வேண்டாம். புது வரவுகளுக்கு தான் அதிக மவுசு என கூறி தயாரிப்பாளர்கள் அந்த நடிகையை ஒதுக்கி விட்டதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி அந்த நடிகையுடன் காதல் டிராமாவில் ஈடுபட்ட நடிகரின் படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. எனவே அவர்கள் இருவரையும் இணைத்து படம் எடுத்தால் நிச்சயம் ஹிட்டாகும் என இயக்குனர் ஒருவர் கூற தயாரிப்பாளரோ அது தேவையில்லாத வேலை. வேறு நடிகையை வைத்து படம் எடுங்கள் என கூறிவிட்டாராம்.

இதனால் நடிகை மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம். மேலும் நடிகையின் கைவசம் உள்ள படங்களில் ஏதாவது ஒன்று வெளியாகி நல்ல ஹிட் கொடுத்தால் மட்டுமே நடிகை கோலிவுட்டில் அவர் மார்க்கெட்டை தக்கவைக்க முடியும். இல்லை எனில் பீல்ட் அவுட் தான் என சிரிக்கிறது சினிமா உலகம்..

Next Story