கல்யாணம்தான் பண்ண முடியல! என் அப்பா சொன்ன வார்த்தை - ஜெமினியை பற்றி வெண்ணிறாடை நிர்மலா பகிர்ந்த சீக்ரெட்

by Rohini |   ( Updated:2023-09-07 12:02:29  )
nirmala
X

nirmala

Actress Venniradai Nirmala: கோலிவுட்டில் ஒரு காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் ஜெமினி கணேசன். மூன்று திருமணங்களை செய்த ஜெமினியின் குடும்பம் மிகப்பெரியது. அதிலும் சாவித்ரியுடனான இவரது காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அந்தளவுக்கு அந்த காலத்திலேயே ஒரு ப்ளே பாயாக வலம் வந்திருக்கிறார் ஜெமினி கணேசன்.

ஜெமினியுடன் நடித்த நடிகைகள் சரோஜாதேவி, தேவிகா, என பல நடிகைகள் இருக்க வெண்ணிறாடை நிர்மலாவுக்கு ஜெமினி என்றால் மிகவும் பிடிக்குமாம். அந்தக் காலத்தில் வெண்ணிறாடை நிர்மலாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் ஜெமினிதானாம்.

இதையும் படிங்க: என்னதான் இசைஞானியா இருக்கட்டுமே! இந்த கேள்வியை கேட்கலாமா? சரியான பதிலடி கொடுத்த பார்த்திபன்

ஒரு சமயம் வெண்ணிறாடை படத்தின் படப்பிடிப்பு ஜெமினி வீட்டில் தான் நடந்ததாம். அப்போது வெண்ணிறாடை நிர்மலா முன்னாடியே ஜெமினி அமர்ந்து கொண்டு ‘உன்னுடைய பொழுது போக்கு ஓவியம் வரைவது என்று சொன்னார்கள். இதுவரை என் மூக்கை யாரும் சரியாக வரைந்ததில்லை. நீயாவது வரைந்து காட்டு’ என்று சொன்னாராம்.

அதன் பின் இருவரும் நண்பர்கள் போல் பழக ஆரம்பித்தார்களாம். ஆனால் வெண்ணிறாடை நிர்மலா திருமணமாகாதவர். கடைசி வரை திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருகிறார். அதற்கு காரணம் அவரது அப்பாதானாம்.

இதையும் படிங்க: அது என் கூடவே பிறந்தது! ‘ராஜாராணி’ முதல் ‘ஜவான்’ வரை கொஞ்சமும் மாறாத அட்லீ – இதுல கோட்ட விட்டீங்களே

அவர் சிறுவயதில் இருக்கும் போது நிர்மலாவை நடனப் பள்ளியில் சேர்த்து விட்டாராம் அவரது அப்பார். அப்பொழுது உடன் இருந்தவர்கள் , நண்பர்கள் என இன்னொரு வீட்டிற்கு கல்யாணம் செய்து கொண்டு போகிறவளுக்கு நடனத்தை சொல்லிக் கொடுக்க என சத்தம் போட்டார்களாம்.

அதற்கு நிர்மலாவின் அப்பா ‘இன்னொருத்தர் வீட்டுக்கு போறதுக்கா என் மகளை வளர்க்கிறேன். அவள் பெரிய ஆளாகி சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு’ என்று சொன்னாராம். அந்த ஒரு வார்த்தையை நிர்மலா தனக்குள் வைத்துக் கொண்டு சாதிக்கவேண்டும் சாதிக்கவேண்டும் என்றே கடைசி வரை கல்யாணமே பண்ணிக்கவில்லையாம். இதை ஒரு பேட்டியில் நிர்மலாவே கூறினார்.

இதையும் படிங்க: இது எப்போ? எனக்கே புதுசா இருக்குங்க… இனிமே சொல்லிட்டு கிளப்புங்க… ஓபனாக உடைத்த விமல்..

Next Story