நடிகைக்கு தெரியாமல் திடீர் முத்தம் கொடுத்த ஆடுகளம் நரேன்... அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!
நடிகர் ஆடுகளம் நரேனின் இயற்பெயர் நாராயணன். சினிமாவுக்காக தனது பெயரை நரேன் என மாற்றிக்கொண்டார். இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ஒரு ராணுவ வீரராம். ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் இந்தப் பெயரைப் பெற்றார். பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். நடிப்புப் பயிற்சியும் மாணவர்களுக்கு எடுத்து வருகிறார்.
இவர் நடித்த பல படங்களில் இவரது யதார்த்தமான நடிப்பைப் பார்க்கலாம். குறிப்பாக அஞ்சாதே, ஆடுகளம், நண்பன், மனம் கொத்திப் பறவை, நய்யாண்டி ஆகிய படங்கள் முக்கியமானவை. நய்யாண்டி படத்தில் நஸ்ரியாவின் தந்தையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமன் அப்துல்லா படத்தில் அறிமுகமானவர் என்றாலும் ஆடுகளம் படத்தில் புகழ்பெற்றதால் இவரது பெயர் ஆடுகளம் நரேன் என்று ஆனது.
இதையும் படிங்க... மகள்கள் விஷயத்தில் இனி அந்த தவறை ரஜினி செய்ய மாட்டார்! பிரபலம் சொன்ன ஷாக் தகவல்
பிரபல படத்தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் நடிகர் ஆடுகளம் நரேன் தனது திரையுலகில் நடந்த சில விசித்திரமான சம்பவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அவற்றில் இருந்து ஒரு சுவையான சம்பவத்தைப் பார்ப்போம்.
நடிகைகள்ல என்கூட நல்ல பழகின கதாநாயகி காஜல் அகர்வால். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துல என்கூட நடிச்சாங்க. ரொம்ப பரொபஷனலா இருக்கும். அவங்களுக்கு டயலாக் இல்லன்னா கூட என் டயலாக்கை இந்தில எழுதி வச்சி அது என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்குவாங்க.
நஸ்ரியா கூட நய்யாண்டி படம் பண்ணினேன். டைரக்டர் சற்குணம் டேக் ஸ்டார்ட் கேமரான்னு சொல்லிட்டு, சார் லாஸ்ட்ல கொஞ்சிட்டுப் போயிடுங்க சார்னு சொல்லிட்டாரு.
இதையும் படிங்க... ஷூட்டிங்கில் தன்னை யார் என்றே மறந்துபோன ஜனகராஜ்!. மனுஷனுக்கு இப்படி ஒரு நோயா!..
அப்படியே கட்டிப்புடிச்சி கொஞ்சும் போது என்னை அறியாம அவங்கள கிஸ் பண்ணிட்டேன். அவங்களும் ஒண்ணும் சொல்லல. ஷாட் முடிஞ்சதும் எல்லாரும் கிளாப் பண்ணினாங்க. "சூப்பரா இருந்துச்சு சார் லாஸ்ட்ல நீங்க பண்ணது"ன்னு சொன்னாங்க. நஸ்ரியா, "ஐ எம் வெரி சாரி"ன்னு சொன்னேன். இது பிளான் பண்ணாம பண்ணினதுன்னு சொன்னேன். அதுக்கு அவங்க, "அதுல என்ன இருக்கு. இது ரீல் தான்.. ரியல் இல்ல"ன்னு சொல்லிட்டாங்க என்கிறார் ஆடுகளம் நரேன்.