தொலைஞ்சதெல்லாம் திரும்ப வருது! தனுஷ் உட்பட.. ஹேப்பி மூடில் ஐஸ்வர்யா

by Rohini |
dhanush
X

dhanush

Aishwarya Rajinikanth: லால் சலாம் படத்தின் ஹார்ட் டிஸ்க் திரும்பவும் கிடைத்து விட்டதாகவும் அதை ஓடிடியில் புத்தம் புது வெர்ஷனில் ரிலீஸ் பண்ண போவதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருந்தார். அதுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. லால் சலாம் படம் வெளியான சமயத்தில் ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

அதாவது படத்தின் சில காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டதாகவும் அதனால் பாதி காட்சிகள் அதில் இல்லை என்றும் கூறியிருந்தார். அதன் காரணமாக கூட படம் எதிர்பார்த்த அளவு இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தொலைந்து போன ஹார்ட் டிஸ்க் திரும்ப கிடைத்து விட்டதாக இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தலய பார்ப்பேனு நினைக்கல! அஜித்துடனான மீட்டிங்கை பற்றி கூறிய கவின்

ஓடிடியில் புது வெர்ஷனில் அந்த படம் ஒளிபரப்பப்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றிய மற்றும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .அதாவது ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனுஷும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் விஷயத்தில் இருவரும் அக்கறையுடன் இருந்து வருகின்றனர்.

இருவரும் இனிமேல் சேரவே மாட்டார்கள் என்ற ஒரு சோகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் சமீப காலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் தனுஷ் லைக் கொடுத்து வருவதாக தெரிகிறது. கூடிய சீக்கிரம் இருவருமே ஒன்று சேரப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிங்க: அஜீத் ஏன் விஜய்க்குப் போட்டியா அதை செய்யவில்லை? பிரபலம் சொன்ன ஆச்சரிய பதில்!

ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடும்போது அதற்கு லைக் கொடுத்திருந்தார் தனுஷ். ஒருவேளை தன் மகனுக்காக கொடுத்து இருப்பாரோ என்று நினைத்திருந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை விருந்து என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதற்கும் தனுஷ் லைக் போட்டிருப்பது ரசிகர்களிடையே ஒருவித சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் மீண்டும் ஒன்று சேர இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் அடுத்த வருடம் ரஜினியின் பொன்விழா ஆண்டு என்பதால் தம்பதியராக ஒன்றாக வந்து அந்த விழாவை சிறப்பிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தளபதி 69க்கு சம்பளம் 275 கோடியா?!. இது விஜய்க்கு தெரியுமா?… கலாய்க்கும் பிரபலம்!…

Next Story