தன் படத்தில் விஜய் படத்தை போட சொன்ன அஜித்!. இது புரியாம அடித்துக்கொள்ளும் ஃபேன்ஸ்..
Ajith vijay: தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் நடிகராக வளர்ந்தவர்கள் அஜித் - விஜய். அஜித் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்து பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக மாறி இப்போது மாஸ் ஹீரோவாகவும் மாறியிருப்பவர் அஜித்.
அப்பாவின் உதவியுடன் சுலபமாக நுழைந்தவர் விஜய். அப்பாவின் இயக்கத்தில் நடித்த படங்கள் மொக்கையாக அமைய, பூவே உனக்காக படம் அவரை டேக் ஆப் பண்ணியது. அந்த படத்தில் இருந்துதான் பெண் ரசிகைகள் அவருக்கு உருவாக துவங்கினர். அதன்பின் லவ் டுடே, காதலுக்கு மரியாதை என நிறைய காதல் படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: அஜித் படத்துல கூட பிரச்சினை இல்லை! சூர்யாகிட்ட முடியல – அந்தப் படம் ஓடாததுக்கு காரணமே இதுதான்
அதன்பின் ஆக்ஷன் படங்களில் மாறி இப்போது பெரிய ஹீரோவாக மாறியிருக்கிறார். ரஜினி - கமல் போன அஜித் - விஜய் இடையே பல வருடங்களாக தொழில் போட்டி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அஜித்தை மறைமுகமாக திட்டை விஜய் வசனம் பேசுவார். விஜயை திட்டும்படி அஜித் தனது படத்தில் பாடல் வரிகளை வைப்பார்.
இதனால், விஜய் - அஜித் ரசிகர்களும் பல வருடங்களாக தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் மாறி மாறி ஹேஷ்டேக்குகளை உருவாக்கி திட்டி வருகின்றனர். ஆனாலும், விஜயும், அஜித்தும் இப்போது அப்படி இருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வயதும், காலமும் அவரகளை பக்குவப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: படம் முழுவதும் எடுத்த பின் ஹீரோவை மாற்றச் சொன்ன ஏவிஎம் செட்டியார்… அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!
மாஸ்டர் பட விழாவில் கோட் சூட் அணிந்து வந்த விஜய் ‘நண்பர் அஜித் போல’ என சொல்லி ஆச்சர்யம் கொடுத்தார். அதேபோல், வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் மங்காத்தா படத்தில் நடித்த போது அந்த படத்தின் ஒரு காட்சியில் ஒரு தியேட்டர் காண்பிக்கப்படும். அதில் ஏதோ ஒரு படம் ஓடுவது போல காட்ட வேண்டும் என நினைத்த வெங்கட்பிரபு அஜித்திடம் ‘நீங்கள் நடித்த படம் ஒன்றை போடலமா’ என கேட்டுள்ளார்.
ஆனால், அஜித் நான் நடிக்கும் படத்தில் நானே நடித்த படத்தை போடவேண்டாம். பிரதர் விஜய் படம் ஒன்றை போடுங்கள்’ என சொன்னாராம். இது வெங்கட்பிரபுவுக்கே ஆச்சர்யமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. விஜய் நடித்த காவலன் படத்தின் காட்சி அதில் போடப்பட்டது குறிப்பிடத்தகக்து.
இதையும் படிங்க: கலாய்த்த ரசிகர்கள்.. ஓடிப்போய் அஜித்திடம் ஒப்பாரி வைத்த வெங்கட்பிரபு.. தல சொன்னது இதுதான்…