உனக்கு ஒன்னுன்னா நான் இறங்கி வருவேன்டா!... வெற்றி துரைசாமி அஞ்சலி செலுத்த வந்த அஜித்..
Vetri Ajith: முன்னாள் சென்னை மேயர் சைதை துரைச்சாமியின் மகனும், இயக்குனருமான வெற்றி துரைசாமியின் திடீர் மறைவால் திரையுலகமே அதிர்ச்சியில் இருக்கின்றனர். வெற்றி அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் வருவாரா என்ற கேள்வி இருந்தது. முன்னாள் சென்னை மேயரான சைதை துரைசாமியின் ஒரே மகன் தான் வெற்றி துரைச்சாமி. இவர் துரைச்சாமியின் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். முடியாதவர்களுக்கு செலவில்லாமல் ஐஏஎஸ் கோச்சிங் கொடுக்கு பணியை அறக்கட்டளை செய்து வருகிறது. வெற்றி துரைச்சாமிக்கு சினிமாவின் மீதும் ஆர்வம் […]
Vetri Ajith: முன்னாள் சென்னை மேயர் சைதை துரைச்சாமியின் மகனும், இயக்குனருமான வெற்றி துரைசாமியின் திடீர் மறைவால் திரையுலகமே அதிர்ச்சியில் இருக்கின்றனர். வெற்றி அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் வருவாரா என்ற கேள்வி இருந்தது.
முன்னாள் சென்னை மேயரான சைதை துரைசாமியின் ஒரே மகன் தான் வெற்றி துரைச்சாமி. இவர் துரைச்சாமியின் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். முடியாதவர்களுக்கு செலவில்லாமல் ஐஏஎஸ் கோச்சிங் கொடுக்கு பணியை அறக்கட்டளை செய்து வருகிறது. வெற்றி துரைச்சாமிக்கு சினிமாவின் மீதும் ஆர்வம் இருந்தது.
இதையும் படிங்க: பார்க்க ரவுடி மாதிரி இருக்கார் இவரு டைரக்டரா?!.. பாரதிராஜாவை பார்த்து பயந்த ராதிகா!…
அவர் ஒரு படத்தினை இயக்கியும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வெற்றி துரைச்சாமிக்கும், அஜித்துக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. இருவரும் பைக் ரைட் செல்வதை வழக்கமாக வைத்து இருந்தனர். அப்படி இருக்க சமீபத்தில் இமாச்சலுக்கு சுற்றுலா சென்றார் வெற்றி துரைச்சாமி. அப்போது நடந்த விபத்தில் அவர் கார் ஆற்றில் விழுந்தது.
இதில் காணாமல் போன வெற்றி 8 நாட்களாக தேடப்பட்டு நேற்று நண்பகலில் கண்டுப்பிடிக்கப்பட்டார். விபத்து நடந்த இடத்தில் இருந்து அடித்து செல்லப்பட்டவர். இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு பாறையில் சிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பலரும் வெற்றி துரைச்சாமியின் குடும்பத்துக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க: இப்படி ஒரு டைட்டில் வச்சதால எனக்கு நேர்ந்த கொடுமை! அர்ஜூன் சொன்ன அந்தப் படம் எதுனு தெரியுமா?
இந்நிலையில் தன்னுடைய நண்பருக்கு அஞ்சலி செலுத்த வெற்றியின் இல்லத்துக்கு மனைவி ஷாலினியுடன் வந்து இருக்கிறார் அஜித். அதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெற்றியின் கல்யாணம் முதற்கொண்டு முக்கிய நிகழ்வுகளில் அஜித் இருந்து இருக்கிறார். வெற்றியின் இன்ஸ்டா மற்றும் எக்ஸ் எல்லாவற்றிலுமே ட்ரிப் சென்ற போது அஜித் எடுத்த நிறைய படங்களே நிறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.