ரஜினியின் சூப்பர் ஹிட் பட ரீமேக்!. அந்த நடிகர் மட்டுமே நடிக்க முடியும்!.. அட இயக்குனரே சொல்லிட்டாரே!..

by சிவா |
rajini
X

Baasha movie: தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பின் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர். இவரின் படங்கள் நல்ல வசூலை பெற்றது. மற்ற நடிகர்களின் படங்களை விட ரஜினியின் படம் அதிக வசூலை பெற்றதால் இவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்தது.

தனது திரைவாழ்வில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ஆனாலும், ரஜினியின் சினிமா வாழ்வில் இவருக்கு மகுடம் போல அமைந்த திரைப்படம் பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, ரகுவரன், நக்மா, ஜனகராஜ் என பலரும் நடித்து 1995ம் வருடம் வெளியான படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க: பாட்ஷா படத்தின் அந்த முக்கிய சீனை தூக்க சொன்ன தயாரிப்பாளர்!.. ரஜினி கொடுத்த வாக்குறுதி!..

இந்த படத்தில் பல கூஸ்பம்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருந்தது ரஜினி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. இதுவே இப்படத்திற்கு பெரிய வெற்றியை தேடித்தந்தது. ரஜினி இதற்கு முன் பல ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தாலும் பாட்ஷா படம் பெரிய ஹலைட்டாக அமைந்தது.

அமிதாப்பச்சன் நடித்த ஒரு ஹிந்தி படத்தை லைட்டா பட்டி டிங்கரிங் செய்து இந்த படம் உருவானது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படம் பற்றி பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அப்போது ‘பாட்ஷா படத்தை ரீமேக் செய்தால் விஜய், அஜித் இருவர்களில் யார் நடித்தால் சரியாக இருக்கும்?’ என்கிற கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: என் படம் கூட ஜெயிலரை கம்பேர் பண்ணாதீங்க.. கொந்தளித்த பாட்ஷா பட இயக்குநர்

இதற்கு பதில் சொன்ன சுரேஷ் கிருஷ்ணா ‘பாட்ஷா ஒரு சூப்பர்ஸ்டார் அடிப்பையில் உருவான படம். அப்படி பார்த்தால் அஜித் நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும்’ என பதிலளித்தார். ஏற்கனவே, ரஜினியின் பில்லா படத்தை அஜித் ரீமேக் செய்து நடித்து ஹிட் கொடுத்தார்.

இந்த படம் மூலம்தான் ஸ்டைலீஸ் மற்றும் மாஸ் ஹீரோவாக அஜித் மாறினார். இன்னும் சொல்லப்போனால் அஜித்துக்கு இந்த ஐடியாவை கொடுத்ததே ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story