பில்டப் முக்கியம் பிகிலே!.. வலிமை மேக்கிங் வீடியோவில் கோட்டைவிட்ட அஜித்....
அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் வலிமை. ஆனால், ஒன்றரை வருடங்களாக அப்படம் பற்றி எந்த அப்டேட்டையும் கொடுக்காமல் மௌனம் காத்த பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். வலிமை அப்டேட் கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் ஓய்ந்தே போய்விட்டனர். திடீரெனெ இப்படம் பொங்கலுக்கு வருவதாக அறிவித்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர். மேலும், சினிமா உலகை பொறுத்தவரை ஒரு ஃபர்ஸ்ட் லுக், மேக்கிங் வீடியோ, டீசர், டிரெய்லர் , […]
அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் வலிமை. ஆனால், ஒன்றரை வருடங்களாக அப்படம் பற்றி எந்த அப்டேட்டையும் கொடுக்காமல் மௌனம் காத்த பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். வலிமை அப்டேட் கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் ஓய்ந்தே போய்விட்டனர். திடீரெனெ இப்படம் பொங்கலுக்கு வருவதாக அறிவித்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்.
மேலும், சினிமா உலகை பொறுத்தவரை ஒரு ஃபர்ஸ்ட் லுக், மேக்கிங் வீடியோ, டீசர், டிரெய்லர் , ரிலீஸ் தேதி அப்டேட் என எதுவாக இருந்தாலும் இந்த நாளில் இந்த நேரத்தில் ஒரு முக்கிய அப்டேட் இருக்கிறது என 2 நாட்களுக்கு முன்பே ஒரு பில்டப் கொடுப்பார்கள்.
ரசிகர்களும் அந்த நாளுக்காகவும், நேரத்திற்காகவும் காத்து கிடப்பார்கள். எனவே, அது தொடர்பான அப்டேட் வரும்போது யுடியூப்பில் அந்த வீடியோ அதிக பார்வைகளை பெறும். ஆனால், வலிமை பொறுத்தவரை அது போல் எதையும் செய்ய வேண்டாம் என அஜித் கூறிவிட்டதால் திடீரென கடந்த 14ம் தேதி வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார் போனிகபூர்.
அந்த வீடியோவில் அஜித் பைக்கில் வீலிங் செய்யும் போது கீழே விழும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது பல அஜித் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. பொதுவாக ஒரு மாஸ் நடிகர் தன்னை இப்படி ரசிகர்களிடம் காட்டி கொள்ள விரும்ப மாட்டார். ஆனால், அஜித் இதில் விதிவிலக்கானவர். நான் படும் கஷ்டத்தையும் பாருங்கள் என அதை போட சொல்லி விட்டார் போல..
ஒருபக்கம், அஜித் கிழே விழுவதை படம் பிடித்து அதை வைத்து படத்தை ஓட்டப் பார்க்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் கூற துவங்கியுள்ளனர். அதோடு, மாநாடு டிரெய்லர் வந்து ஒரே நாளில் 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்தனர். ஆனால், வலிமை மேக்கிங் வீடியோ வெளியாகி 2 நாட்கள் ஆகிய நிலையில் 5 மில்லியன் வியூஸ்களை மட்டுமே இந்த வீடியோ பெற்றுள்ளது.
அஜித் பில்டப் வேண்டாம் என நினைத்தது இப்படி முடிந்திருக்கிறது...