மீண்டும் பைக் டூர்!.. திரும்பி வர பல மாசம் ஆகுமாம்!... ரசிகர்களை பற்றி கவலைப்படாத அஜித்!...
நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது என்பது தொழில் மட்டுமே. ஷூட்டிங் முடிந்துவிட்டால் அது எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனக்கு பிடித்த விஷயங்களை செய்ய போய்விடுவார். கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடும் போட்டி, ட்ரோன் பறக்க விடுவது, ரிமோட் மூலம் ஹெலிகாப்டரை பறக்கவிடுவது என அவருக்கு பல பிடித்தமான விஷயங்கள் இருக்கிறது. உடல் நலம் மற்றும் வயதை கருத்தில் கொண்டு இப்போது கார் மற்றும் பைக் ரேஸ்களில் அவர் கலந்து கொள்வதில்லை. ஆனால், மற்ற எல்லாவற்றையும் அஜித் […]
நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது என்பது தொழில் மட்டுமே. ஷூட்டிங் முடிந்துவிட்டால் அது எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனக்கு பிடித்த விஷயங்களை செய்ய போய்விடுவார். கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடும் போட்டி, ட்ரோன் பறக்க விடுவது, ரிமோட் மூலம் ஹெலிகாப்டரை பறக்கவிடுவது என அவருக்கு பல பிடித்தமான விஷயங்கள் இருக்கிறது.
உடல் நலம் மற்றும் வயதை கருத்தில் கொண்டு இப்போது கார் மற்றும் பைக் ரேஸ்களில் அவர் கலந்து கொள்வதில்லை. ஆனால், மற்ற எல்லாவற்றையும் அஜித் செய்து வருகிறார். அடிக்கடி இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாவதுண்டு. சமீபத்தில் கூட நார்வே உள்ளிட்ட வெளிநாடுகளில் பைக்கில் பயணம் செய்தார்.
இதையும் படிங்க: ரசிகர்களின் கவலையை பூர்த்தி செய்த அஜித்! விடாமுயற்சி இல்லனா என்ன? இது போதும் தல
உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற வேண்டும் என்பதுதான் அவரின் டார்கெட். அதற்காக திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை நிறைவேற்றி வருகிறார். முதலில் இந்தியாவின் பல பகுதிகளிலும் அவர் பைக் ஓட்டினார். அது முடிந்த பின் இந்தியா அல்லாத மற்ற நாடுகளில் தனது பயணத்தை துவங்கினார். அதில் 30 சதவீதம் முடிந்துவிட்டது. அவர் நடிப்பில் துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட 7 மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னமும் துவங்கவில்லை.
லைக்கா நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் செப்டம்பர் மாதம் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கலாம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து 3 மாதங்கள் துபாயில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. எனவே, அஜித் அங்கேயே தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு அஜித் படத்துல தான் அத வச்சேன்! வாலி சொன்ன சீக்ரெட்
இந்நிலையில், அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படம் முடிந்தபின் கிட்டத்தட்ட 11 மாதம் அஜித் பிரேக் எடுக்கவுள்ளாராம். அதில் உலகத்தின் மீதியுள்ள மற்ற நாடுகளிலும் அவர் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே, விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் தனது அடுத்த படத்திற்கான வேலையை 2025 ஜனவரிக்கு பின்னர்தான் துவங்குவார் என சொல்லப்படுகிறது.