மீண்டும் முருங்கை மரத்துல வேதாளமாக ஏறிய அஜித்!.. விடாமுயற்சி இந்த முறையாவது ஸ்டார்ட் ஆகுமா?..

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6 மாதங்களாக படப்பிடிப்பு ஏதும் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் வரும் ஜூன் 20-ஆம் தேதி மீண்டும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியானது. அதை நம்பி படக்குழுவினர்அஜர்பைஜானிற்கு புறப்பட்டு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், கடைசி நேரத்தில் நடிகர் அஜித்குமார் தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி கொடுத்தால்தான் படப்பிடிப்புக்கு செல்வேன் என அடம் பிடித்து வருவதாக தற்போது அதிர்ச்சி […]

By :  Saranya M
Update: 2024-06-14 07:00 GMT

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6 மாதங்களாக படப்பிடிப்பு ஏதும் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் வரும் ஜூன் 20-ஆம் தேதி மீண்டும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியானது.

அதை நம்பி படக்குழுவினர்அஜர்பைஜானிற்கு புறப்பட்டு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், கடைசி நேரத்தில் நடிகர் அஜித்குமார் தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி கொடுத்தால்தான் படப்பிடிப்புக்கு செல்வேன் என அடம் பிடித்து வருவதாக தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: எம்ஜிஆருக்கு வந்ததே கோபம்… பயந்து நடுங்கிய திரையுலகம்… நடந்தது இதுதான்..!

லைகா நிறுவனம் விடாமுயற்சியின் இறுதி கட்ட படப்பிடிப்புக்கு சுமார் 13 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கி உள்ள நிலையில், அதை தாண்டி அஜித்துக்கு இந்தப் படத்துக்காக 105 கோடி சம்பளம் வழங்கப் போவதாக கூறப்பட்ட நிலையில், இன்னமும் பாதி சம்பளம் கூட அஜித்துக்கு சென்று சேரவில்லை என தகவல்கள் கசிந்துள்ளன.

இதுதான் தக்க சமயம் என்றும் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டால் லைகா தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்காமல் போக வாய்ப்புள்ளது என நினைத்து அஜித் குமார் இப்படியொரு கிடுக்குப் பிடியை போட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அப்படியா எழுதினார் வைரமுத்து? நாள் முழுவதும் காத்துக் கிடந்த பாரதிராஜா

படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டு டப்பிங் பேசுவதற்கு முன்பாக முழு சம்பளத்தையும் பெற்று விடலாமே!. அஜித்குமார் படப்பிடிப்பை முடித்து விட்டால் அவருக்குத்தானே குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு பாதிக்காது என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக லைகா நிறுவனம் பல ஆண்டுகள் அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகளுக்கு பின்னர் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் முயற்சியோடு இந்தியன் 2 திரைப்படம் ஒரு வழியாக தயாராகி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதேபோல விடாமுயற்சி நிலமையும் மாறி விடுமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் செட் ஆகும்!. வேற எவனுக்கும் வராது!.. ஓப்பனா சொன்ன சிவாஜி!..

Tags:    

Similar News