அஜித்குமார் கடமைக்குன்னு நடிச்ச படம்… ஆனால் செம ஹிட்… இந்த படத்தையா அப்படி நினைச்சாரு?

அஜித்குமார் “உன்னை கொடு என்னை தருவேன்” என்ற திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரவீன் காந்தியின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அப்போது அஜித்குமார் தனக்கு விருப்பமான டெக்னீஷீயன்களை படத்திற்காக பயன்படுத்தச் சொன்னாராம். இது பிரவீன் காந்திக்கு இஷ்டமில்லாமல் இருந்திருக்கிறது. ஆதலால் அந்த புராஜெக்ட் டிராப் ஆனதாம். அதனை தொடர்ந்து ஒரு புது இயக்குனர் சொன்ன கதையில் நடிக்கலாம் என முடிவெடுத்தார் அஜித். அதே நேரத்தில் “சிட்டிசன்” திரைப்படத்திலும் அஜித் நடித்து வந்தார். அந்த புது இயக்குனரின் […]

Update: 2023-05-25 04:47 GMT

அஜித்குமார் “உன்னை கொடு என்னை தருவேன்” என்ற திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரவீன் காந்தியின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அப்போது அஜித்குமார் தனக்கு விருப்பமான டெக்னீஷீயன்களை படத்திற்காக பயன்படுத்தச் சொன்னாராம். இது பிரவீன் காந்திக்கு இஷ்டமில்லாமல் இருந்திருக்கிறது. ஆதலால் அந்த புராஜெக்ட் டிராப் ஆனதாம்.

Ajith Kumar

அதனை தொடர்ந்து ஒரு புது இயக்குனர் சொன்ன கதையில் நடிக்கலாம் என முடிவெடுத்தார் அஜித். அதே நேரத்தில் “சிட்டிசன்” திரைப்படத்திலும் அஜித் நடித்து வந்தார். அந்த புது இயக்குனரின் இயக்கத்தில் படப்பிடிப்பை தொடங்கியபோது முதலில் அஜித்திற்கு அந்த படத்தின் மீது நம்பிக்கையே இல்லையாம். எப்படியோ அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டார் அஜித்.

அதன் பின் அந்த படத்தின் பணிகள் முடிவடைந்தபிறகு படக்குழுவினர் அஜித்துடன் அந்த படத்தை திரையிட்டுப் பார்த்தார்கள். ஆனால் அஜித் அந்த படத்தின் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டாராம். இதனால் அந்த புது இயக்குனர் கவலைக்குள்ளானாராம்.

Dheena

எனினும் அத்திரைப்படம் வெளிவந்து மாஸ் ஹிட் ஆனதாம். அந்த திரைப்படத்தின் பெயர் “தீனா”. அந்த புது இயக்குனரின் பெயர் ஏ.ஆர்.முருகதாஸ். இவ்வாறு அஜித் சுத்தமாக நம்பிக்கை வைக்காத திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸும் அஜித்தும் மீண்டும் இணைவார்கள் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கான சுவடே இல்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

இதையும் படிங்க: 16 ட்யூன் போட்டும் திருப்தியடையாத தயாரிப்பாளர் – ஹார்மோனியமே வேண்டாம்!.. கடுப்பான எம்.எஸ்.வி

Tags:    

Similar News