அடுத்த கிரணா மாறிட்டாரா அமலா பால்!.. கோவாவில் குடியும் குடித்தனமுமாக இவரும் செட்டில் ஆகிடுவாரு போல!..
நடிகை அமலா பால் பாலி தீவை விட்டு தற்போது கோவாவுக்கு வந்து விடுமுறையை கொண்டாடும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குளிரவைத்துள்ளார். முன்னதாக நடிகை கிரண் இதே போலத்தான் கோவாவில் தொடர்ந்து போட்டோக்களை போட்டு வந்த நிலையில், அங்கே ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டார். அமலா பால் நடித்த முதல் படமே சிந்து சமவெளி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த படத்திலேயே எல்லை மீறிய காட்சிகளில் படு போல்டாக நடித்து தான் எந்தளவுக்கு […]
நடிகை அமலா பால் பாலி தீவை விட்டு தற்போது கோவாவுக்கு வந்து விடுமுறையை கொண்டாடும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குளிரவைத்துள்ளார். முன்னதாக நடிகை கிரண் இதே போலத்தான் கோவாவில் தொடர்ந்து போட்டோக்களை போட்டு வந்த நிலையில், அங்கே ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டார்.
அமலா பால் நடித்த முதல் படமே சிந்து சமவெளி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த படத்திலேயே எல்லை மீறிய காட்சிகளில் படு போல்டாக நடித்து தான் எந்தளவுக்கு துணிச்சலானவள் என்பதை நிரூபித்து இருப்பார்.
இதையும் படிங்க: நான்தான் மாஸ்!.. எனக்கு ஸ்டார்னா அவங்கதான்!. அடுக்கு மொழியில் அசத்திய டி.ராஜேந்தர்..
மைனா திரைப்படம் அமலா பாலை அப்படியே முன்னணி நடிகையாக மாற்ற விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத்திருமகள், தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, விஷ்ணு விஷால் உடன் ராட்சசன் என பல படங்களில் லீடு ரோலில் நடித்தார்.
இயக்குநர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துக் கொண்ட அமலா பால் சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். ஆடை படத்தில் பாதிக்கும் மேற்பட்ட படத்தில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் முழு நிர்வாணமாக அமலா பால் நடித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது.
இதையும் படிங்க: மூடு மாறுது.. அத கொஞ்சம் மூடு செல்லம்!. மாராப்ப விலக்கி மனச கெடுக்கும் பிரக்யா…
அதன் பின்னர் அமலா பால் மார்க்கெட் அடியோடு படுத்து விட்டது. சினிமாவில் நடிக்கவே விடாமல் தன்னை கார்னர் செய்ததாகவும், தற்கொலை செய்து கொள்ளவே எண்ணங்கள் தோன்றியதாகவும் பேட்டிகளில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அமலா பால்.
அமைதியான மனநிலையை தேடி அடிக்கடி வெளிநாடுகளில் உள்ள தீவுகளுக்கு சென்று வரும் அமலா பால் தற்போது கோவாவுக்கு டூர் சென்றுள்ளர். அங்கே பீச்சில் சரக்கு பாட்டிலுடன் அமலா பால் இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த கிரணாக ரெடியாகி விட்டார் போல அமலா பால் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.