செகண்ட் ஆப்-ல காணாம போன லோகேஷ் கனகராஜ்!. காப்பாத்திய அனிருத்!.. அவர் மட்டும் இல்லனா?!....

by சிவா |
leo
X

Leo Review: விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்து காத்திருந்த லியோ திரைப்படம் இன்று வெளியாகிவிட்டது. அதேநேரம் தமிழகத்தில் அதிகாலை 4 மணிக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் காலை 9 மணிக்கு முதல் காட்சியை ரசிகர்கள் பார்த்தனர். எனவே, பல தியேட்டர்களிலும் வழக்கமான கொண்டாட்டங்கள் இல்லை.

ஒருபக்கம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியில் காலை 4 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. எனவே, அப்படத்தை பார்த்துவிட்டு பலரும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் படம் எப்படி இருக்கிறது என பதிவிட்டு விட்டனர். துவக்கத்தில் முதல் பாதி மாஸாக இருக்கிறது. சும்மா தீயா இருக்கு என பலரும் பதிவிட்டனர்.

இதையும் படிங்க: படத்த ரத்னகுமார்தான் டைரக்ட் பண்ணியிருக்காரு!.. கிளைமேக்ஸ் பாத்துட்டு கதறுறும் ரசிகர்கள்!.. ஐயோ பாவம்!..

ஹைனா காட்சிகள் மற்றும் விஜயின் அறிமுக காட்சிகள் என எல்லாமே சிறப்பாக இருக்கிறது. இண்டர்வெல் காட்சிகள் சும்மா தெறிக்கவிடுது. இதே மாதிரி இரண்டாம் பாதியும் இருந்தா படம் விஜய்க்கும், லோகேஷ் கனகராஜுக்கும் பெரிய ஹிட்டா அமையும் என்றேல்லம் பலரும் பதிவிட்டனர்.

ஆனால், அவர்கள் எல்லாம் இரண்டாம் பாதி பார்த்துவிட்டு உற்சாகம் குறைந்துவிட்டனர். ஏனெனில், லியோ படத்தின் 2ம் பாதி நன்றாக இல்லை.. வழக்கமான போதை மருந்து உள்ளிட்ட காட்சிகள் வருகிறது. திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. படத்தின் கிளைமேக்ஸும் பெரிய அளவுக்கு இல்லை. இரண்டாம் பாதியில் சண்டை காட்சி கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லை’ என பலருக்கும் சுருதி குறைந்துவிட்டது.

இதையும் படிங்க: இனிமே என் படமாதான் இருக்கும்!. சொன்னது நீதானா?… லியோவில் விஜய்க்காக சறுக்கிய லோகேஷ்!..

ஆனால், இரண்டாம் பாதியில் எங்கெல்லாம் தொய்வு வருகிறதோ அங்கெல்லாம் அனிருத் தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ரசிகர்களை தூங்கவிடாமல் அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அவர் மட்டும் இல்லையெனில் 2ம் பாதி படுமொக்கையாக இருந்திருக்கும் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

ஜெயிலர் பட வெற்றி விழாவில் பேசிய ரஜினி ‘இந்த பட ஒரு எபோவ் ஆவரேஜ் படமாகத்தான் இருந்தது. ஆனால், அனிருத்தின் பின்னணி இசை படத்தை தூக்கி கொண்டு சென்றுவிட்டது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அனிருத் ஒரு முக்கிய காரணம்’ என வெளிப்படையாக பாராட்டியிருந்தார். தற்போது லியோ படத்தின் 2ம் பாதியிலுமே அதுவே நடந்துள்ளது.

இதையும் படிங்க: லியோ எல்சியூ தான்!.. ஆக்‌ஷனில் மட்டுமில்லை ஆக்டிங்கிலும் அசுரத்தனத்தை காட்டிய விஜய்.. ட்விட்டர் விமர்சனம்!

Next Story