கோட் படம் வசூல் குறைஞ்சதுக்கு இதுதான் காரணம்! இவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்
Goat Movie:கோட் படம் ரிலீசாகி கிட்டத்தட்ட பத்து நாட்கள் கடந்த நிலையில் இன்னும் அந்த படத்தை பார்க்க மக்கள் ஆர்வமாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் படத்தின் வசூல் பற்றியும் படத்தை பற்றியும் திரையரங்க வினியோகஸ்தர் திருச்சி ஸ்ரீதர் அவருடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். கோட் திரைப்படத்தை தமிழில் ரசிகர்கள் மட்டும் கிட்டத்தட்ட 69 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்களாம் .
லியோவை விட அதிகமாக கோட் திரைப்படத்தை தான் அதிகம் பேர் ரசித்திருக்கிறார்கள். ஆனால் வசூலில் லியோவை விட கோட் திரைப்படம் குறைவான வசூலை தான் பெற்றிருக்கிறது என திருச்சி ஸ்ரீதர் கூறுகிறார். ஆனால் படத்தை பொருத்தவரைக்கும் நல்ல படம். நல்ல கதை. படத்தில் செகண்ட் ஹீரோயினாக வருபவர் அந்த அளவுக்கு யாரையும் ஈர்க்கவில்லை.
இதையும் படிங்க: 10 டிவிடி பார்த்து படம் பண்ணார் அட்லீ.. சம்பளம் வாங்கிட்டு போயிட்டார் விஜய்!.. பொங்கிய பிரபலம்!..
யுவன் சங்கர் ராஜாவின் இசை பெரிய ஏமாற்றம். ஆனால் படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை எங்கேஜுட்வாகவே வைத்திருந்தார் வெங்கட் பிரபு. எப்பவும் போல விஜயின் நடிப்பு அற்புதம் .இந்த படத்தை குடும்பப் பெண்கள் குடும்பங்கள் குழந்தைகள் என அனைவருமே ரசித்து வருகிறார்கள். இந்த படம் ஹிந்தியில் ரிலீசாகவில்லை .
தமிழ் படத்தை தான் அப்படியே ஹிந்தியில் மாற்றி இருக்கிறார்கள். ஹிந்தியில் என்ன ஒரு பிரச்சனை என்றால் படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்பு தான் ஓடிடியில் ரிலீஸ் ஆக வேண்டும். அப்படிப்பட்ட படங்களை தான் அவர்கள் ஹிந்தியில் ரிலீஸ் செய்ய அனுமதிப்பார்கள். அதனால்தான் இந்தப் படத்தை ஹிந்தியில் எடுக்கவில்லை.
இதையும் படிங்க: எங்க சுத்தினாலும் வந்த இடம் சிறப்பு! ‘தளபதி 69’ டிராவல் கதை தெரியுமா?
தமிழ் படத்தை தான் அப்படியே அங்கே வெளியிட்டிருக்கிறார்கள். அதனால் அங்கு வசூல் கொஞ்சம் சுமார்தான். இதனாலையே திரைப்படத்தின் வசூல் குறைந்தது. மேலும் படத்தின் டிரைலரை பார்த்து வெங்கட் பிரபுவுக்கு போன் செய்தேன் .பாராட்டினேன்.
ஆனால் படம் ரிலீஸ் ஆகி 50 முறை வெங்கட் பிரபுவுக்கு தொலைபேசியில் அழைத்திருப்பேன். என் போனை எடுக்கவே இல்லை. அது ஏன் என தெரியவில்லை. படம் நல்லா இருக்கிறது என்று சொல்லத்தான் அவருக்கு நான் போன் செய்கிறேன். ஆனால் அவர் எடுக்க மறுக்கிறார் என வெங்கட் பிரபுவை பற்றியும் திருச்சி ஸ்ரீதர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: தொலைஞ்சதெல்லாம் திரும்ப வருது! தனுஷ் உட்பட.. ஹேப்பி மூடில் ஐஸ்வர்யா