ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் களைக்கட்டிய பிரச்னைக்கு இவர் தான் காரணமே? அட நீங்களே இப்படி பண்ணலாமா?
Marakkuma Nenjam: சமூக வலைத்தளம் முழுவதும் ஒரே சர்ச்சையாகி இருக்கிறது ரஹ்மான் கச்சேரியில் நடந்த சலசலப்பு தான். ட்ராபிக்கை சமாளித்து நிகழ்ச்சி அரங்குக்கு சென்றால் உள்ளேவே வர முடியாத அளவுக்கு நெருக்கடி நடந்து பலருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறதாம்.
மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து இசை கச்சேரி நடத்தப்பட்டது. இது சில வாரங்களுக்கு முன்னரே நடக்க இருந்தது. ஆனால் அன்று பெய்த மழையால் நடக்காமல் ரத்தானது. 2 நாட்களுக்கு முன்னர் தான் இந்த கச்சேரி நடந்தது.
இதையும் படிங்க: 39 வயசுலயும் சும்மா கின்னுன்னு இருக்கேன்!.. நீங்க என்னடா பாடி ஷேம் பண்றது.. பட்டாசா வெடித்த பிரியாமணி!
கணக்கே இல்லாமல் கொள்ளை விலைக்கு டிக்கெட் விற்று இருக்கிறார்கள். அரங்கின் 20000 ரசிகர்களுக்கு அனுமதி வாங்கிவிட்டு 40000 மேற்பட்ட டிக்கெட் விற்று 25 கோடி ரூபாய் வரை வசூலித்து இருக்கின்றனர்.
அதிகமான டிக்கெட் விற்றால் அலைமோதிய கூட்டம் எனச் சொல்லி கொள்ளலாம் என்ற ஐடியாவில் இதை செய்திருக்கலாம் என்கின்றனர் திரை விமர்சகர்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு பெரிய ஷேர் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி இத்தனை சலசலப்பு நடந்ததே இல்லை. இந்த முறை இது மிகப்பெரிய பிரச்னையாகவே உருவெடுத்து இருக்கிறது. இதற்கு பின்னணியில் இருப்பவர் அவர் மகன் அமீன் தான் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அட தொட்டதுக்கெல்லாம் சினுங்குவாரு போல – கமல், ஸ்ரீதேவி போஸ்டரை பார்த்து விரக்தியில் ரஜினி எடுத்த முடிவு!
ரஹ்மானுக்கு தெரியாமல் தாராளமாக நிறைய டிக்கெட்டை விற்று விடுங்கள். ஆனால் எனக்கும் ஒரு ஷேர் வேண்டும் என தனி டீல் பேசி இருக்கிறார். கணக்கே இல்லாமல் விற்ற டிக்கெட் தான் வினையாகி இருக்கிறது.
பிரச்னைக்கு அப்புறம் மகனை அழைத்து செம டோஸ் விட்ட ரஹ்மான் இனிமேலாவது பொறுமையாக இதை கையாள அட்வைஸ் செய்து இருக்கிறாராம். இதற்கு முன்னர் பல பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகத்துக்கு இந்த தலையீடு தான் தற்போது பிரச்னையாகி இருப்பதாகவும் சிலர் கிசுகிசுக்கின்றனர்.