கடன் பிரச்னையால் முடங்கிய அயலான்… படத்தின் கதையும் இணையத்தில் கசிந்ததா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் மிகப்பெரிய லட்சத்தில் கடனில் இருப்பதால் பல வருடமாக கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதை குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருக்கும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி வெற்றி நடிகராக தற்போது இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. தற்போது எஸ்.கே21 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: விக்ரம் தாண்டியாச்சி.. அடுத்து பொன்னியின் செல்வன்!. வசூலில் சக்கை போடு போடும் ஜெயிலர்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் 40 லட்சத்துக்கும் அதிகமான கடனால் தற்போது கிடப்பில் இருக்கிறது. ரவிக்குமார் எழுதி இயக்கிய அயலான் திரைப்படத்தினை ஆர்.டி.ராஜா தயாரித்து இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை.
ஏலியன் ஒன்று பூமிக்கு வரும் அது சிவகார்த்திகேயனுடன் நட்பாக பழகுமாம். இருவருக்கு இடையில் நடக்கும் கதை தான். மீண்டும் ஏலியன் பூமியில் இருந்து திரும்புவது போல அமைக்கப்பட்டு இருக்கும் கதை தான் அயலான். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த கதை நிறைய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.
இதையும் படிங்க: எஸ்பிபியையும் தாண்டி ரஜினிக்கு மாஸ் ஓப்பனிங் சாங் கொடுத்த சிங்கர்ஸ்! ‘ஜெய்லர்’ படத்தில் நடந்த மேஜிக்