அப்போ அவருதானா? பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்தானா? ஓட்டு நிலவரம்
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ன் கடைசி வாரத்தின் இறுதி கட்டம் நெருங்கிக் கொண்டிருக்க கிட்டத்தட்ட டைட்டில் வின்னரின் முடிவுகளும் தற்போது கசிய தொடங்கி இருக்கிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 ஆரம்ப முதலிலேயே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பதுதான் உண்மை. கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அவருக்கு சரியான மாற்றாக விஜய் சேதுபதி அமைந்தார்.
ஆனால் போட்டியாளர்கள் தேர்வில் பிக் பாஸ் சீன் மிகப்பெரிய சொதப்பலை உருவாக்கியது. ஒரு சீசனில் ஒன்று அல்லது இரண்டு விஜய் டிவி போட்டியாளர்கள் இருந்தாலே கொந்தளிக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் மொத்த போட்டியாளர்களும் தங்கள் ப்ராடக்டாக இருக்க கடுப்பாகி போனர்.
சரி போட்டியாளர்கள் தான் பெரிய அளவில் ரசிகர்களை காணவில்லை என பார்த்தாலும் டாஸ்க்களும் சொதப்பப்பட்டது. போட்டியாளர்களாவது ஏதாவது வீட்டிற்குள் கன்டென்ட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டால் அதிலும் சொதப்பல் தான் நடந்தது.
இப்படி தொடர்ச்சியாக சொதப்பலுக்கு மேல் சொதப்பல் நடக்க ஒரு கட்டத்தில் டிஆர்பியில் மிகப்பெரிய அடி வாங்கியது பிக் பாஸ் சீன். இதை தொடர்ந்து நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் டீமை மாற்றி புதிய டீம் உள்ளே வந்தது. அதை தொடர்ந்து கொஞ்சம் சுவாரஸ்யம் அதிகரித்தது.
தொடர்ந்து வார டாஸ்குகள் நடத்தப்பட்ட ரசிகர்கள் மீண்டும் நிகழ்ச்சியை காண தொடங்கினர். வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் உள்ளே போக ஆட்கள் எக்கசக்கமாக வீட்டிற்குள் இருந்ததால் தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு மேல் டபுள் எலிமினேஷனாக வீட்டிற்குள் நடந்தது வந்தது.
பணப்பெட்டி வைக்கப்பட்டு ஒரு போட்டியாளர் வெளியேற்ற படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் டீம் அதிலும் ட்விஸ்ட் வைத்து வீட்டில் இருந்து ஓடிச் சென்று பெட்டியை எடுத்து வந்தால் அதை அவர்களுடைய கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம் என புதிய விதியை உருவாக்கியது. இதில் முத்து மற்றும் ரயான் இருவரும் ஓடிச்சென்று பெட்டியை கைப்பற்றி வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் இறுதிவரை ஓட்டிங் குறித்த தகவல் தற்போது கசிந்து இருக்கிறது. இதில் முதலிடத்தில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னராக மாறும் இடத்தில் முத்துகுமரன் இருப்பதாக கூறப்படுகிறது. சௌந்தர்யா இரண்டாம் இடத்திலும், விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் மூன்றாம் இடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.