2 நொடியில் பிக்பாஸை விட்டு வெளியேறிய ஜாக்குலின்… மொத்த சம்பளம் மட்டும் பெத்த லட்சமாம்…
Jacqueline: பிக்பாஸ் வீட்டில் நடந்த பெட்டி டாஸ்கில் வெல்ல முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய ஜாக்குலின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8ன் இறுதி எபிசோட் நாளை ஷூட் செய்யப்பட இருக்கிறது. இது ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும். இந்த போட்டி தொடங்கப்பட்ட போது இருந்த வரவேற்பை விட முடியும் தருவாயில் தற்போது அதிக வரவேற்பு இருக்கிறது.
16 போட்டியாளர்கள் உள்ளே செல்ல தொடர்ந்து அடுத்த சில வாரத்தில் ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் வீட்டிற்குள் வந்தனர். வீடு இந்த முறை ஆண் மற்றும் பெண் என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது. பெரிய அளவில் டாஸ்கும் இல்லை. போட்டியாளர்கள் கண்டெண்ட்டும் கொடுக்கவில்லை.
ரொம்பவே போர் அடிக்க தொடங்க டிஆர்பி பாதாளத்தில் விழுந்தது. தொடர்ந்து, கிரியேட்டீவ் டீம் மாற்றப்பட்ட ஓரளவு நல்ல டாஸ்குகள் வைக்கப்பட்டது. இதில், வார டாஸ்குகளும் நடந்ததால் மீண்டும் நிகழ்ச்சி சுடுபிடித்தது.
தொடர்ச்சியாக போட்டியில் ஐந்து வாரங்களாக இரட்டை எலிமினேஷனில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் பைனலில் ஜாக்குலின், சவுந்தர்யா, பவித்ரா, ரயான், விஷால் மற்றும் முத்துக்குமரன் மீதம் இருந்தனர். இவர்களுக்கு இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது.
ஆனால் எப்போதும் போல இல்லாமல் இந்த முறை பெட்டியை ஓடிச்சென்று எடுத்து வீட்டிற்குள் வர வேண்டும். அப்படி வருபவர்களுக்கு பணத்துடன் வீட்டில் இருக்கவும் வாய்ப்பு கொடுக்கப்படும் எனக் கூறிந்தனர். இதில் முத்துக்குமரன் தொடங்கி ரயான் மற்றும் விஷால் என ஆண் போட்டியாளர்கள் வென்றுவிட்டனர்.
ஆனால் பிரச்னையே பெண் போட்டியாளர்களுக்கு அமைந்தது. முதலில் பவித்ரா ஓட அவரும் கடைசி நொடியில் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். அடுத்து ஓடிய சவுந்தர்யா ஒரு கட்டத்தில் தன்னால் முடியாது என பாதி வழியிலேயே திரும்பி விட்டார்.
கடைசியாக ஓடிய ஜாக்குலின் பெட்டியை எடுத்துக்கொண்டு கடைசி நொடியில் திரும்ப நினைத்தாலும் வீட்டிற்குள் வர 2 நொடி தாமதம் ஏற்பட அவர் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பெட்டியில் இருந்த பணமும் கிடைக்காமல் போனது.
இந்நிலையில் வெளியேறிய ஜாக்குலினுக்கு ஒரு நாளுக்கு சம்பளமாக 25 ஆயிரம் வரை பேசப்பட்டு இருந்ததாம். 101 நாட்கள் இருந்த ஜாக்குலினுக்கு 25 லட்சத்துக்கு 25 ஆயிரம் சம்பளமாக கிடைத்து இருக்கிறதாம். 2 நொடியில் கடைசி மேடை ஏறும் வாய்ப்பையும் இழந்து இருக்கிறார்.