{"vars":{"id": "76339:5011"}}

BB Tamil 9: போர்க்களமாக மாறிய  ‘பிக்பாஸ்’ வீடு! பிரவீனை அடிக்க ஓடும் கம்ருதீன்

இப்படி அடிதடியில் இறங்கிட்டாங்களே? களவரமாக மாறிவரும் பிக்பாஸ் சீசன் 9
 

பிக்பாஸ் சீசன் 9 இப்போதுதான் சூடுபிடித்து வருகிறது. வைல் கார்ட் எண்ட்ரியாக பிரஜன், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்பட்டிருக்கின்றனர். இப்போது வந்த புது போட்டியாளர்களுக்கும் ஏற்கனவே இருந்த பழைய போட்டியாளர்களுக்கும் ஆரம்பத்திலேயே வாக்குவாதம் எழத் தொடங்கிவிட்டது. ஏன் இப்படி கத்திக்கிட்டே இருக்கீங்க என உள்ளே வந்த புது போட்டியாளர்கள் கேட்க அடுத்த நாளே அவர்களும் சேர்ந்து கத்த ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் இப்போது முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. கம்ருதீனுக்கும் பிரவீனுக்கும் இடையே சண்டை ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் பிரவீனை அடிக்க ஓடுகிறார் கம்ருதீன். இவர்களை பிரஜன் தடுத்து நிறுத்த பிரஜனுக்கும் கம்ருதீனுக்கும் இடையே சண்டை ஆரம்பிக்கிறது. இருவரும் மாறிமாறி சண்டையிட்டு கொள்கின்றனர். இதை பார்த்துக் கொண்டிருந்த பிரஜனின் மனைவி சாண்ட்ரா அழ ஆரம்பிக்கிறார்.

அதன் பிறகு ஏன் நீ இப்படி பண்ற? என பிரஜனை சாண்ட்ரா அழுது கொண்டே கேட்கிறார். இந்த புரோமோ பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இந்த வாரம் ஒரு களவர பூமியாகத்தான் பிக்பாஸ் வீடு இருக்கப் போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வீட்டிற்குள் வரும் போதே புது போட்டியாளர்கள் நான்கு பேரும் ‘உள்ளே இருக்கிறவர்களை கிழிக்க போகிறோம்’ என்று சொல்லித்தான் வந்தார்கள்.

அதன் முதல் கட்டமாக இப்படியொரு பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். ரசிகர்களும் இதைத்தான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எந்தவித அசாம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொள்வது அதைவிட மேலானது. இதை விஜய்சேதுபதி எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதுதான் கேள்வி.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் எப்படியாவது ஒரு ஜோடி உருவாகிவிடும். வெளியே வரும் போது couple ஆகத்தான் வெளியே வருவார்கள். ஆனால் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஜோடியை போட்டியாளர்களாக உள்ளே அனுப்பியிருக்கிறார்கள். அவர்களும் வீட்டிற்குள் எப்படி இருப்பார்கள்? அவர்களும் சண்டை போடுவார்களா? என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.