Biggboss Tamil: உன் ஆளு நான் இல்ல… கம்ரூதினை சரியாக உள்ளே வந்து லாக் செய்த திவ்யா கணேஷ்!
Biggboss Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் கம்ரூதினின் பழைய காதலி குறித்த சர்ச்சை விஷயங்களுக்கு திவ்யா கணேஷ் பதிலளித்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கியதிலிருந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாகவே நினைத்தனர். முதல் சில வாரங்கள் நிகழ்ச்சி பெரிய அளவில் கன்டென்ட் இல்லை. ஆனாலும் சண்டையை மட்டுமே அவர்கள் நம்பி கட்டிக் கொண்டே இருந்தது பலருக்கு வெறுப்பை கொடுத்தது.
அதிலும் கடந்த வாரம் உச்சபட்சமாக ஒவ்வொரு நாளும் இருந்த எல்லா போட்டியாளர்களுமே சண்டை போட்டு கத்திக்கொண்டே இருந்தது பார்ப்பவர்களுக்கு காது வலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதை தாங்கிக் கொள்ளாத பிக் பாஸ் நீங்கள் விளையாடுவது சரி இல்லை என இறங்கி பேசினார்.
அதை தொடர்ந்து இந்த வார இறுதியில் வந்த விஜய் சேதுபதி கூட ஸ்பீக்கர் வைத்து பேசி இப்படித்தான் நீங்கள் விளையாடியது இருந்தது எதாவது எங்களால் கேட்க முடிந்ததா என கடுமையாக போட்டியாளர்களை விமர்சனம் செய்து அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தார்.
அதைத்தொடர்ந்து மூன்றாவது முயற்சியாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் உள்ளிட்ட நான்கு வைல்ட் கார்டு எண்ட்ரிகள் உள்ளே நுழைந்தனர். அவர்களும் போட்டியாளர்கள் விளையாடுவதை சரமாரியாக விமர்சித்து அவர்களுக்கு தங்களால் முடிந்த டிப்ஸ்களை வழங்கினர்.
இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சில வாரங்களில் கம்ருதீன் தன்னுடைய பழைய காதலி குறித்து மோசமாக விமர்சனம் செய்திருந்தார். அப்பொழுது அவர் செய்த பாடி லாங்குவேஜ் கூட ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.
அந்த பேச்சில் அவர் தன்னுடைய முன்னாள் காதலி தன்னுடைய மகாநதி சீரியல் ஜோடி தான் என ஓப்பனாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இதுவரை கம்ருதீனுக்கு அந்த சீரியலில் இரண்டு நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விலகி இருக்கிறார்கள்.
அந்த வகையில் நேற்று வைல்டு காடாக உள்ளே வந்த திவ்யா கணேஷ் இது குறித்து கம்ருதீனை கேள்வி கேட்க அவர் நீ இல்லை என ஓப்பனாக பதில் சொல்லியிருக்கிறார். இந்த வகையில் எல்லோரும் நினைத்தது போல் முதல் ஜோடி பிரதீபா தான் கம்ரூதினின் முன்னாள் காதலி என பதில் கிடைத்திருக்கிறது.