Biggboss Tamil: பார்வதி தொடர்ந்து கனியை டார்கெட் செய்வது ஏன்? இப்படி வேற நடந்து இருக்கா?
Biggboss Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 9 சூடு பிடித்து வரும் நிலையில் போட்டியாளர் பார்வதி மற்றும் கனி இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்து கொண்டு வருகிறது. இதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக தற்போதைய தகவல் தெரிவிக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 தொடங்கி மூன்று வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. இதுவரை ஒரு போட்டியாளர் தானாக வெளியேறி இருக்க, மூன்று போட்டியாளர்களை ரசிகர்கள் வாக்களித்து வெளியேற்றி இருக்கின்றனர்.
அந்த வகையில் நான்காவது வாரமாக இந்த வாரம் நிறைய வித்தியாசமான டாஸ்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களிடம் இருந்து அவர்களுடைய துணி முதல் ஆபரணங்கள் வரை எல்லாவற்றையும் பிக் பாஸ் எடுத்துக்கொண்டு விட்டார்.
இதன் மூலம் போட்டியாளர்களின் உண்மை முகம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய வாரம் நேற்று தொடங்கிய முதலே பார்வதி மற்றும் கனியிடையே மிகப்பெரிய சண்டை பிடித்தது. டீலக்ஸ் ரூமுக்கு மாறிய கனி தன்னுடைய துணியை பார்வதியிடம் எடுத்து வர சொல்லினார்.
பார்வதி எடுத்து வந்து வாசலில் வைத்துவிட்டு செல்ல என்னுடைய துணியை இப்படி வைத்தது தப்பு என கனி பிரச்னை செய்ய ஒரு கட்டத்தில் பார்வதியை மன்னிப்பு கேட்க வைத்தார். அதை தொடர்ந்து கம்ரூதினிடம் பேசிய பார்வதி என் மேல் அவங்களுக்கு முன் பகை எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் கனி போட்டியாளராக கலந்து கொண்டார். அதே சீசனில் பார்வதியும் கோமாளியாக உள்ளே வந்து ஒரு சில எபிசோடு மட்டுமே இருந்துவிட்டு வெளியேறினார். முதல் எபிசோடில் கனி மற்றும் பார்வதி தான் ஜோடி சேர்ந்தனர்.
அப்பொழுது நடந்த சண்டையின் காரணமாக தான் பார்வதி வந்ததிலிருந்து கனி மீது தன்னுடைய கோபத்தை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. கனியும் பார்வதியை மட்டுமே தொடர்ந்து வேலை சொல்லுவதும் இவர்களுக்கு ஏற்கனவே குக் வித் கோமாளில் எதுவும் பிரச்சினை நடந்திருக்குமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.