இது வரைக்கும் கேமிரா பாத்து சொன்னதில்லை! வெட்கமே இல்லாம இவ்வளவு ஓப்பனா சொன்ன சரவணவிக்ரம்

by Rohini |
sara
X

sara

SaravanaVikram: விஜய் டிவியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்குகிறது. ஏழாவது சீசனில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் வீட்டில் இதுவரை 14 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவருக்கொருவர் சளைச்சவர் இல்லை என்றளவுக்கு கடுமையாக போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். திடீரென சண்டை போடுவது அடுத்த நாளே ஒன்று கூடுவதும் ஆரம்பத்தில் இந்த சீசன் ஒரே குழப்படியாகவே இருந்தது.

இதையும் படிங்க: அழகு.. நடிப்பு.. நடனம்.. எல்லாத்திலும் டாப்!.. கருப்பு வெள்ளை காலத்திலும் கலக்கிய நடிகைகள்!..

ஆனால் போக போக சீசன் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. யார் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று சொல்ல முடியாத அளவுக்கு போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக விளையாடிக் கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் ஒரு டஃப் போட்டியாளராக இருந்த பிரதீப்பை அனைவரும் சேர்ந்து வெளியனுப்பியதோடு மற்ற போட்டியாளர்கள் யாரை அடுத்து வெளியே அனுப்பலாம் என்ற திட்டத்தையும் தீட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்படும் போட்டியாளராகவே இருந்து வருபவர் சரவண விக்ரம்.

இதையும் படிங்க: பாதி கிழிச்ச சட்டையில பட்டனும் இல்ல!.. வாலிப பசங்களை பாடாய்படுத்தும் ரேஷ்மா…

இவரை எந்த கேட்டகரியில் சேர்ப்பது என்றே தெரியாத அளவுக்கு அந்த வீட்டில் இருந்து வருகிறார். சத்தமாக பேசுவதும் கிடையாது. பூர்ணிமா மற்றும் மாயா கேங்கிற்கு ஆரம்பத்தில் ஆதரவாக செயல்பட்டு வந்தவர் சமீபகாலமாக வீட்டில் அங்கும் இங்குமாக அலைவதைத்தான் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் நேற்று கேமிரா முன்னாடி நின்று கொண்டு சரவண விக்ரம் ‘இதுவரை கேமிரா முன்பு இத சொன்னதே இல்லை’ என்று சொல்லிக் கொண்டே பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் சரவண விக்ரம் என கூறினார், அதுமட்டுமில்லாமல் ஒரு விஷயத்தை மாறி மாறி விதைத்தால்தான் அதுவாக வளரும் என்று சொல்வார்கள். அதனால்தான் சொல்கிறேன் டைட்டில் வின்னர் சரவணவிக்ரம் என்று என கூறினார்.

இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தின் கதை இது தானா? சிம்பிளா அடிச்சாலும் மாஸா இருக்கணும் நினைப்பு போல..!

Next Story