Biggboss Tamil 8: வர்ஷினி 'பலியாடு' ஆகிட்டாங்க... எவிக்சன் குறித்து 'பிரபலம்' ஓபன் டாக்!
Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் எவிக்சன் என்பது நாம் நினைப்பது போல ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் முடிவு செய்யப்படுவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
கடந்த வாரம் ரியா வெளியேறிய போதே சாச்சனா தான் வெளியேறி இருக்க வேண்டும் ரியாவை பலியாடு ஆக்கி விட்டனர் என்று பேச்சுக்கள் எழுந்தன. அது தற்போது உண்மையாகி விட்டது. நேற்று எவிக்சன் லிஸ்டில் வர்ஷினி இல்லையாம்.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: பெண் போட்டியாளருக்காக கலங்கிய அருண்… அர்ச்சனாவ மறந்துடாதீங்க பாஸ்!
கடைசி நேரத்தில் உள்ளே வந்த விஜய் சேதுபதி சாச்சனாவை காப்பாற்ற வர்ஷினியை பலியாடு ஆக்கி இருக்கிறார். இதுகுறித்து செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தன்னுடைய இன்ஸ்டாகிராமில், 'அவங்க பேமிலி பாவம் கஷ்டப்படுற பேமிலி. எவிக்சன் பண்ண கூடாது. இன்னொரு பலியாட எவிக்ட் பண்ணிடுங்க. பலியாடு வர்ஷினி. அப்போ கஷ்டப்படுற பேமிலி பொண்ணு யாரு? ஷ்ஷப்பா லாஸ்ட் மினிட்ல எவிக்சன் கார்ட மாத்தி கஷ்டம்,' என விஜய் சேதுபதியை விளாசி இருக்கிறார்.
இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் மனுஷன் சாச்சனாவ பிரீஸ் டாஸ்க் வரைக்கும் கொண்டு போய் டாப் 5 போட்டியாளரா மாத்தாம விட மாட்டாரு போல என்று புலம்பி வருகின்றனர்.
18 வயதாகும் சாச்சனா அழுவது தவிர வேறு எதுவும் செய்ய மாட்டேன் என்று அடமபிடிக்கிறார். அவருக்கு சப்போர்ட் செய்து விஜய் சேதுபதி ரசிகர்களின் கணிசமான ஆதரவினை இழக்கப் போகிறார் என்பது தான் உண்மை.
இதையும் படிங்க: சொதப்பிய மணிரத்னம்.. 5 இயக்குனர்கள் வேலை பார்த்த நாயகன்!. வெளிவராத தகவல்!..