பப்ளிசிட்டி புடிக்காது!.. ஆனால், அதெல்லாம் பண்ணுவோம்.. அஜித்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!..

by Saranya M |   ( Updated:2024-01-23 15:26:52  )
பப்ளிசிட்டி புடிக்காது!.. ஆனால், அதெல்லாம் பண்ணுவோம்.. அஜித்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!..
X

நடிகர் அஜித்குமார் தனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என சொல்லி வருகிறார். ஆனால், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு பப்ளிசிட்டி செய்து வருகிறார் என புளூ சட்டை மாறன் தாக்கியுள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் விடாமுயற்சி.

இதுவரை இல்லாத அளவுக்கு முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டிலேயே அந்த படம் தயாராகி வருகிறது. இதற்கு முன் சர்வதேச அளவில் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படமாக அஜித்தின் பில்லா மற்றும் விவேகம் உள்ளிட்ட படங்கள் இருந்தன.

இதையும் படிங்க: செல்லத்த அப்படியே கிட்னாப் பண்ணுங்கடா!.. ஒரு சைடுன்னாலும் ஒர்த்தா காட்டும் அனுபமா…

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடிகர் அஜித் நடனமாடிய வீடியோக்கள் வெளியாகின. மேலும் அஜித்தை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரின் செல்போனை பிடுங்கி அந்த வீடியோவை அஜித் டெலிட் செய்ய வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார் அஜித் தொடர்ந்து தனது ஸ்லிம்மான புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிட வைத்து வருகிறார் கேட்கிற விமர்சனம் அவர் மீது தற்போது எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஷாலுமாதான் என் உலகம்! வேற எதுவும் இல்லடா.. வைரலாகும் அஜித் – ஷாலினி புகைப்படம்

அதற்கு தீனி போடும் விதமாக அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் இல் ஷேர் செய்த அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலான நிலையில், புளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”தமிழ் சினிமாவில் பப்ளிசிட்டியை விரும்பாத ஒரே நடிகர். டெய்லி ஒரு ஃபோட்டோ மட்டும் ரிலீஸாகும். மத்தபடி சத்தியமா பப்ளிசிட்டி பிடிக்காது.” என பதிவிட்டு கலாய்த்துள்ளார்.

Next Story