பீனிக்ஸ்.. 3BHK.. பறந்து போ.. ஜுராசிக் வேல்ட் ரீபர்த்... முதல் நாள் வசூல் எவ்வளவு?... வாங்க பார்ப்போம்!......

By :  MURUGAN
Published On 2025-07-05 12:08 IST   |   Updated On 2025-07-05 12:08:00 IST

சினிமா உலகை பொறுத்தவரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் வெளியாகும். அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஜூலை 4ம் தேதி 4 திரைப்படங்கள் வெளியானது. அந்த 4 படங்களில் பறந்து போ, பீனிக்ஸ், 3BHK ஆகிய 3 தமிழ் படங்களும் Jurrasi Park Rebirth என்கிற ஹாலிவுட் படமும் அடக்கம். இந்த 4 படங்களும் முதல் நாளில் என்ன வசூலை பெற்றிருக்கிறது என பார்ப்போம்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்தான் பீனிக்ஸ். பல படங்களில் சண்டை காட்சிகளை அமைத்த அனல் அரசு இப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு பக்கா ஆக்சன் படமாக பீனிக்ஸ் உருவாகியுள்ளது. இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா ஓவர் ஆட்டிட்டியூட் காட்டியதாக பலரும் அவரை ட்ரோல் செய்தார்கள். ஆனால், படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாளில் இப்படம் 10 லட்சம் வசூல் செய்திருக்கிறது.


ஒரு கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருப்பதால் இன்னும் ஒரு வாரத்திற்கு இதுபோல் வசூலித்தால் லாபம் வந்துவிடும் என்கிறார்கள். ஏனெனில் மற்ற மொழி உரிமை, டிவி மற்றும் ஓடிடி உரிமைகள் ஓரளவுக்கு நல்ல விலைக்கே விற்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்து ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள பறந்து போ திரைப்படமும் நேற்று வெளியாந்து. ராம் தனது வழக்கமான ஸ்டைலில் இருந்து விலகி ஒரு காமெடி கதையை இயக்கியுள்ளார். இந்த படம் முதல் நாளில் 42 லட்சம் வரை வசூல் செய்திருக்கிறது.


அடுத்து சரத்குமார், தேவயாணி, சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்தான் 3BHK. ஒரு நடுத்தரவு குடும்பம் சொந்த வீடு வாங்க கனவு காண்கிறார்கள். அந்த கனவு நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ஃபீல் குட் வகையான இந்த படத்தில் சித்தார்த் மிகவும் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் வருகிறது. ஸ்ரீகணேஷ் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் முதல் நாளில் ஒரு கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.


அடுத்து ஜுராசிக் பார்க் படங்களுக்கென்றே இந்தியாவில் ஒரு தனி வியாபாரம் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளை அழைத்துகொண்டு குடும்பத்துடன் பார்க்கும்படி இந்த படங்கள் இருக்கிறது. ஏற்கனவே ஜுராசிக் பார்க் 6க்கும் மேற்பட்ட படங்கள் வந்த நிலையில் இப்போது ஜுராசிக் வேல்ட் ரீபர்த் படம் வந்திருக்கிறது. இப்படம் முதல் நாளில் 9 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

Tags:    

Similar News