100 கோடி கலெக்ஷனுக்கே இப்படி முக்குதே!. 500 கோடிக்கு ஆப்பு வச்சிட்டாரே ஷங்கர்!...
Game Changer: பெரிய இயக்குனர், பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாகும்போது பொதுவாக திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிக அளவில் எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த படம் உருவாக துவங்கியது முதல் முடியும் வரை அது தொடர்பான செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கும்.
தில் ராஜூ: சமூகவலைத்தளங்களில் பலரும் அந்த படம் தொடர்பான செய்திகளை பதிவிட்டு ரசிகர்களிடம் ஹைப் ஏத்துவார்கள். படம் இவ்வளவு கோடி பட்ஜெட் என்றெல்லாம் பில்டப் செய்வார்கள். அப்படி பில்டப் ஏற்றப்பட்ட திரைப்படம்தான் ஷங்கரின் கேம் சேஞ்சர். தெலுங்கில் அதிக பட்ஜெட்டுகளில் படமெடுக்கும் தில் ராஜூ தயாரித்த திரைப்படம் இது.
சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை கடந்த 2 வருடங்களாக எடுத்தார் ஷங்கர். அதிலும், இந்த படத்தில் இடம் பெற்ற 5 பாடல்களுக்கு மட்டும் 85 கோடி வரை அவர் செலவு செய்தாராம். குறிப்பாக ஒரு லைரானா பாடலுக்கு மட்டும் 15 கோடி செலவு செய்திருக்கிறார்.
இந்தியன் 2 தோல்வி: ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் ஷங்கருக்கு கம் பேக் படமாக வரும் என பலரும் எதிர்ப்பார்த்தார்கள். ஏனெனில், அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இப்படி வெளியான கேம் சேஞ்சர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. படத்தில் வரும் 20 நிமிட பிளஷ்பேக் காட்சி, ராம் சரணின் நடிப்பு, தமனின் பின்னணி இசை ஆகியவை மட்டுமே சிறப்பாக இருப்பதாகவும் கதை, திரைக்கதையில் புதிதாக ஒன்றுமில்லை என்றும் பலரும் சொன்னார்கள். அதோடு, ரசிகர்கள் எதிர்பார்த்த ‘லைரானா’ பாடலும் படத்தில் இடம்பெறவில்லை. இதுவும் ரசிகர்களை ஏமாற்றியது. எனவே, இந்தியன் 2-வை ஒப்பிட்டால் இந்த படம் ஓகே என்பதுதான் பொதுவான விமர்சனமாக இருந்தது.
கேம் சேஞ்சர் வசூல்: எனவே, படம் வெளியாகி 3 நாள் ஆகியும் இப்படம் 100 கோடி வசூலை கூட தொடவில்லை. 4வது நாளில்தான் இப்படம் 100 கோடி வசூலை தாண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை இப்படம் 106.34 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படம் வெளியான அடுத்தநாள் முதல் நாள் 184 கோடி வசூல் என தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால், அதை யாரும் நம்பவில்லை. இதே பொங்கலுக்கு தில் ராஜு தயாரிப்பில் வெங்கடேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து ஒரு தெலுங்கு படம் வெளியாகியுள்ளது. எனவே, அந்த படம் தொடர்பான புரமோஷன்கள்தான் தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அதிகம் இடம் பெற்றிருக்கிறது.