ஜென்ம நட்சத்திரம், பன் பட்டர் ஜாம், டிரெண்டிங்... பாக்ஸ் ஆபீஸ்ல முதல் நாள் வசூல்!
மணிவர்மன் இயக்கத்தில் வெளியான திகில் படம் ஜென்ம நட்சத்திரம். சஞ்சய் மாணிக்கம் மிரட்டலாக இசை அமைத்துள்ளார். தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா உள்பட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு பாசிடிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. படத்தில் திடுக்கிடும் திகில் காட்சிகளும், பின்னணி இசையும் பிளஸ் பாயிண்டாக உள்ளன.
பன் பட்டர் ஜாம் 2கே கிட்ஸ்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட படம். ராகவ் மிர்தாவின் இயக்கத்தில் உருவான படம். பிக்பாஸ் ராஜூ நடித்துள்ளார். படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தும் பெரிய வசூல் இல்லை. ஆனால் நேற்றைய படங்களில் இதுதான் நம்பர் ஒன்.
டிரெண்டிங் படத்தில் கலையரசன் நடித்துள்ளார். இதுவும் சொல்லும்படி இல்லை. இவை தவிர ஆக்கிரமிப்பு, கெவி, காலம் புதிது, இரவுப்பறவை, சென்ட்ரல், யாதும் அறியான் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. ஆனால் அட்ரஸே இல்லை. எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள். கவனத்தை ஈர்க்கும் வகையில் வொர்த் இல்லை.
ஜென்மநட்சத்திரம், பன் பட்டர் ஜாம், டிரெண்டிங், கெவி ஆகிய படங்கள் நேற்று ரிலீஸ் ஆனது. இவற்றில் முதல் 3 படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் (தோராயமாக) என்னன்னு பாருங்க.
ஜென்மநட்சத்திரம் முதல் நாளில் 16 லட்சமும், பன் பட்டர் ஜாம் முதல் நாளில் 17 லட்சமும், டிரெண்டிங் முதல் நாளில் இரண்டரை லட்சமும் வசூலித்துள்ளது. இப்படியே போனால் இனி சின்ன பட்ஜெட்ல படம் எடுக்குறதுக்கு தயாரிப்பாளர்கள் ரொம்பவே யோசிப்பாங்க போல. அழுத்தமான கதையும், அழகான திரைக்கதையும் இருந்தால் நிச்சயம் படம் ஓடும் என்பதை இனியாவது புரிந்துகொள்வார்களா இளம் படைப்பாளிகள் என்றே கேட்கத் தோன்றுகிறது.