கண்ணப்பா 5 நாள் வசூல் இவ்வளவுதானா!.. இதுக்கா இப்படி மிரட்டினாங்க!.. ஐயோ பாவம்!.
Kannappa Collection: கடந்த சில வருடங்களாகவே பேன் இண்டியா படங்கள் அதிகரித்துவிட்டது. அதாவது, பல நூறு கோடிகளை அள்ளுவதற்காக ஒரு படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியிடுகிறார்கள். இதை துவக்கி வைத்த திரைப்படம் பாகுபலி. அதன்பின் பாகுபலி 2, கேஜிஎப், கேஜிஎப் 2, ஆர்.ஆர்.ஆர். புஷ்பா, புஷ்பா 2 போன்ற படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளியாகி நல்ல வசூலை பெற்றது.
அதிலும் பாகுபலி 2 படம் 1200 கோடியும், புஷ்பா 2 படம் 1800 கோடியும் வசூல் செய்து தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு ஆசையை காட்டிவிட்டது. எனவே, பிரபாஸ், அல்லு அர்ஜூன் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் எல்லாமுமே பேன் இண்டியா படங்காளகவே உருவாகி வருகிறது.
அந்த வரிசையில் தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடித்துள்ள கண்ணப்பா படமும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இந்த படத்தில் சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்க பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார் ஆகியோரும் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
கடந்த 27ம் தேதி இப்படம் வெளியானது. இப்போதெல்லாம் முதல் படம் வெளியானவுடனே அப்படத்திற்கு சமூகவலைத்தளங்களில் நெகட்டிவ் கருத்துக்கள் வந்தால் அது படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கிறது. எனவே, கண்ணப்பா பட புரமோஷன் விழாவில் பேசிய விஷ்ணு மன்சுவின் அப்பா மோகன் பாபு ‘கண்ணப்பா படம் பற்றி நெகட்டிவ் ரிவ்யூ சொன்னால் அவர்கள் சிவனின் கோபத்திற்கு ஆளாவார்கள்’ என மிரட்டினார்.
இதை பலரும் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்தார்கள். இதற்காகவே ‘படம் பற்றி தைரியமாக விமர்சிப்போம்’ என பல விமர்சகர்களும் சொன்னார்கள். அப்படி வெளிவந்த கண்ணப்பா படம் ரசிகர்களை கவரவில்லை. அதோடு, படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை இப்படம் 27.5 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இதன் பட்ஜெட் 200 கோடி என சொல்லப்படும் நிலையில் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
மோகன்பாபு ரஜினியின் நெருங்கிய நண்பர். எனவே, சென்னை வந்து ரஜினிக்காக பிரத்யோக காட்சி எல்லாம் போட்டுக்காட்டினார். படத்தை பார்த்துவிட்டு விஷ்ணு மன்ச்சுவை ரஜினி கட்டிப்பிடித்து பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.