லியோ வசூல் என்ன தெரியுமா?!.. அதிர வைத்த லோகேஷ் கனகராஜ்!.. இவ்வளவு கோடியா?!..

Lokesh kanagaraj: விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. தமிழ் சினிமாவில் இந்த படத்திற்கு இருந்தது போல ஒரு ஹைப் எந்த படத்திற்கும் ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும். ஏனெனில், விக்ரம் எனும் மெகா ஹிட்டுக்கு பின் லோகேஷ் இயக்கிய படம் இது. அதோடு, படத்தின் தலைப்பு மற்றும் விஜய் லுக் எல்லாமே பெரிய ஹைப்பை உண்டு பண்ணியது.
ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு பக்கா ஆக்சன் படமாக லியோவை உருவாக்கினார் லோகேஷ். டிவிட்டரில் பல மாதங்கள் லியோ தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்து. எல்லா யுடியூப் சேனல்களிலும் சினிமா செய்தியாளர்கள் லியோ படம் பற்றியே பேசினார்கள். லியோ படம் பற்றியே அதிகம் விவாதிக்கப்பட்டது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் வில்லனாக நடிக்கிறார்கள், இயக்குனர் மிஷ்கினும் கேங்ஸ்டர்களில் ஒருவராக நடித்திருக்கிறார் என ஹைப் ஏற்றினார்கள். அனிருத் இசையில் பாடல்களும், கிளிம்ப்ஸ் வீடியோக்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், படத்தின் இரண்டாம் பாதியும், கிளைமேக்ஸும் ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கவில்லை. விஜயின் அப்பா சஞ்சய் தத் நரபலியில் நம்பிக்கை கொண்டவர். மகளையே அவர் நரபலி கொடுக்கிறார் என்றெல்லாம் லோகேஷ் அமைத்த திரைக்கதைதிருப்தியாக இல்லை. எனவே, படத்தின் இரண்டாம் பாதியை பலரும் விமர்சித்தனர். மேலும், லியோ படம் பெரிய வெற்றியெல்லாம் இல்லை எனவும் சிலர் பேசினார்கள்.

படத்தின் ரிலீஸ் தேதியை சொல்லி அழுத்தம் கொடுத்ததால் நேரமில்லாமல் போய்விட்டது. இனிமேல் இந்த தவறை செய்யமாட்டேன் என லோகேஷ் பேட்டியும் கொடுத்தார். தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் லியோ படம் பற்றி பேசியிருக்கிறார்.
லியோ படம் மிகப்பெரிய வெற்றிதான். அப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதனால்தான் என்னுடைய சம்பளம் 50 கோடியாக உயர்ந்தது. இது எனது முந்தையை சம்பளத்தை விட 2 மடங்கு அதிகம் என சொல்லியிருந்தார். லியோ படம் உலகம் முழுவதும் சேர்த்து 621.90 கோடியை வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் இப்படம் 342 கோடியை வசூல் செய்தது. 2023ம் வருடம் அதிக வசூல் செய்த தமிழ் படமாக லியோ இருக்கிறது. அதேபோல், மிகவும் வேகமாக 500 கோடி வசூல் செய்த படமாகவும் லியோ இருக்கிறது.