வசூலை அள்ளும் தலைவன் தலைவி!.. 100 கோடி கிளப்பில் இணையுமா?..

Thalaivan Thalaivi: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடித்து கடந்த ஜுலை 25ம் தேதி வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையே உள்ள ஈகோவை ஜாலியாக காட்டி இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த படத்தில் யோகி பாபு, சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார், இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பொட்டல மிட்டாயே பாடல் யூடியூப்பில் வெளியாகி படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. படம் வெளியான முதல் நாளே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது.
அதேபோல் படம் முழுக்க விஜய் சேதுபதியும்,நித்யா மேனனும் கத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்கிற விமர்சனமும் வந்தது. ஆனால் இது படத்தின் வசூலை பாதிக்கவில்லை. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் உலகளவில் 75 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த வார இறுதி வரை இப்படம் நல்ல வசூலை பெற்றால் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்டுகிறது. மகாராஜா படத்திற்கு பின் தலைவன் தலைவி விஜய் சேதுபதிக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது.