4 நாட்களில் இவ்வளவு கோடியா?.. பாக்ஸ் ஆபிசில் பட்டய கிளப்பும் கிங்டம்..

by Murugan |
kingdom
X

Kingdom: தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்கள் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் இவர். தமிழில் நோட்டா என்கிற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

கடந்த சில வருடங்களாகவே இவரின் படங்கள் வரவேற்பை பெறவில்லை. பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிகர் படமும் தோல்வி அடைந்தது. அதன்பின் வெளியான குஷி, தி பேமிலி ஸ்டார் போன்ற படங்களும் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில்தான் ஜுலை 31ம் தேதி இவரின் நடிப்பில் உருவான கிங்டம் படம் வெளியானது.


படம் வெளியான முதல் நாள் சமூகவலைதளங்களில் இப்படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் வந்தது. எனவே இப்படம் ஓரளவிற்கு நல்ல வசூலை பெற்று வருகிறது. போலீஸாக இருக்கும் விஜய தேவரகொண்டா வில்லன் குரூப்பை பிடிப்பதற்காக கேங்ஸ்டர் போல மாறுவது போல கதை அமைத்திருந்தனர். ஆக்‌ஷன் காட்சிகளும், செண்டிமெண்ட் காட்சிகளும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் 64 கோடிகளை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் 100 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story