தக் லைப்-க்கு பின் மீண்டும் வேறலெவல் கெட்டப்பில் கமல்!.. அடுத்த பட அப்டேட்!..

By :  MURUGAN
Published On 2025-06-04 18:45 IST   |   Updated On 2025-06-04 18:45:00 IST

Thuglife: விஸ்வரூபம் 2 படத்திற்கு பின் 4 வருடங்கள் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்கவில்லை. பிக்பாஸ் ஆங்கர், அரசியல் என வேற ரூட்டுக்கு மாறினார். அதன்பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்க அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக பேசப்பட்டது. ஆனால், அதிலிருந்து ரஜினி விலகினார். எனவே, லோகேஷ் இயக்கத்தில் கமலே நடித்து விக்ரம் படம் உருவானது.

இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து 500 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. எனவே, கமலின் இமேஜ் சினிமா உலகில் உயர்ந்தது. கல்கி படத்தின் 2 பாகங்களிலும் நடிக்க கமலுக்கு 150 கோடி சம்பளம் பேசப்பட்டது. அதேநேரம், ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான இந்தியன் 2 படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது.

ஆனாலும், கமலின் மார்க்கெட் கீழே இறங்கவில்லை. மணிரத்னத்துடன் இணைந்து தக் லைப் படத்தில் நடிக்க துவங்கினார். நாயகன் படத்திற்கு பின் இருவரும் இணைந்தாலும், இந்த படத்தில் கமலுடன் சிம்பு இணைந்து நடித்ததாலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும், திரிஷா, அபிராமி போன்றவர்களும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.


தக் லைப் படம் நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. கடந்த பல நாட்களாகவே இப்படம் தொடர்பான புரமோஷனில் கமல், சிம்பு, மணிரத்னம், திரிஷா ஆகியோர் ஈடுபட்டிருந்தார்கள். ஒருபக்கம் தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானது என கமல் சொல்ல சில கன்னட அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக் லை படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என மிரட்டினார்கள்.

ஆனால், கமலோ ‘தவறாக எதுவும் சொல்லவில்லை என்பதில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்லிவிட்டார். மேலும், இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். நீதிமன்றமும் கமலை மன்னிப்பு கேட்க சொன்னது. ஆனால், கமல் விளக்கம் மட்டுமே அளித்தார். அதோடு, கர்நாடகாவில் தக் லைப் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாகவும் தெரிவித்துவிட்டார்.

நாளை வெளியாகும் தக் லை படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. அடுத்து சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பு - அறிவு சகோதரர்கள் இயக்கத்தில் கமல் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்டு மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் நடைபெறவிருக்கிறதாம். இந்த படத்திற்காக மலையூர் மம்மட்டியான் போல ஒரு புதிய கெட்டப்புக்கு கமல் மாறவிருக்கிறாராம். அனேகமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கமலின் லுக் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News