ரஞ்சித் படத்தில் சண்டை பயிற்சியாளர் மரணம்!.. அக்‌ஷய் குமார் செய்த தரமான சம்பவம்...!

By :  MURUGAN
Published On 2025-07-18 11:39 IST   |   Updated On 2025-07-18 11:39:00 IST

சினிமாவில் ஸ்டண்ட் நடிகர்கள் முக்கிய அங்கமாக இருப்பவர்கள். ஹீரோவிடம் அடி வாங்கி பல்டி அடித்து கீழே விழுபவர்கள். கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுவார்கள். பல அடி உயரத்திலிருந்து கீழே குதிப்பார்கள். காரின் கண்ணாடியில் ஹீரோ தலையை மூட்டுவார். கண்ணாடி உடைந்து தலை உள்ளே போகும். நாம் ஒரு வினாடி கடந்து போகும் சண்டை காட்சிகளுக்கு பின் ஸ்டண்ட் கலைஞர்களின் அபாரமான, அசாத்தியமான உழைப்பு இருக்கிறது.

சண்டைக்காட்சிகளில் நடிப்பது மட்டுமில்லாமல் ஹீரோக்களுக்கு டூப் போடுவார்கள். வில்லன் அடித்து ஹீரோ கீழே விழுவார். ஆனால், ஹீரோ விழமாட்டார். அவருக்கு பதில் ஸ்டண்ட் நடிகர்கள்தான் நடிப்பார்கள். அதேபோல், ஹீரோ பைக் ஓட்டுவது போலவும், வேகமாக கார் ஓட்டுவது போலவும் திரையில் காட்டப்படும் காட்சிகளில் ஹீரோ நடிக்க மாட்டார். அவருக்கு பதில் ஒரு ஸ்டண்ட் நடிகர்தான் நடிப்பார்.


படத்தில் கார் சேஸிங்கில் ஹீரோவின் கார் இடித்து வில்லன் அடியாட்களின் பல கார்கள் கீழே விழுந்து புரளும். காரை அப்படி கவிழ்த்து ரிஸ்க் எடுத்து நடிப்பவர்கள் ஸ்டண்ட் நடிகர்கள்தான். அப்படி சினிமாவில் கார், ஜீப், லாரி, டெம்போ போன்ற வாகனங்களை கவிழ்த்து நடிக்கும் ஸ்டண்ட் நடிகர்களில் ஒருவர்தான் மோகன்ராஜ். பல படங்களில் இது போன்ற காட்சிகளில் இவரின் உழைப்பு இருக்கிறது.

இதில் சோகம் என்னவெனில் இப்படி உயிரை வைத்து செய்யும் வேலைக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கொடுப்பார்கள். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது ஒரு காட்சி எடுக்கப்பட்ட போது மோகன்ராஜ் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார். திரையுலகில் இது சோகத்தை ஏற்படுத்தியது. ஸ்டண்ட் நடிகர்களுக்கு அதிக சம்பளமும் இல்லை. ஷூட்டிங் நடக்கும்போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் இல்லை, அவர்களின் உயிருக்கு மரியாதையும் இல்லை என ஸ்டண்ட் நடிகர்கள் பொங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பின் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நாடு முழுவதும் உள்ள 650 ஸ்டண்ட் நடிகர்களுக்கு தனது சொந்த செலவில் இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்திருக்கிறார். பல கோடி சம்பளம் வாங்கும் கோலிவுட் நடிகர்கள் யாரும் இதை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News