ரிலீஸுக்கு முன்னயே இவ்வளவு கோடியா?!.. அடிச்சி தூக்கும் பைசன் காளமாடன்!...

by MURUGAN |
bison
X

Bison Movie: இயக்குனர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ். தன்னுடைய இன மக்கள் சந்தித்த, சந்திக்கும் பிரச்சனைகளை இவர் தனது திரைப்படங்களில் பேசி வருகிறார். இவர் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் விவாதங்களை துவக்கி வைத்தது. கீழ் சாதி என சொல்லப்படும் இளைஞன் தனது கல்லூரியில் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. இதை அதிரும்படி சொல்லியிருந்தார் மாரி செல்வராஜ்.

இந்த படம் நல்ல வசூலை பெறவே அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். 80,90களில் தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களை காவல் அதிகாரிகளும், அரசும் எப்படி நசுக்கிறார்கள் என மாரி காட்டியிருந்தார். இப்படத்தில் தனுஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன்பின் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில் ஆகியோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார். தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள ஒருவருக்கு அரசியலில் பதவி இருந்தாலும் அந்த கட்சியை சேர்ந்த மற்றவர்கள் அவரை எப்படி மதிக்கிறார்கள் என இப்படத்தில் மாரி செல்வராஜ் காட்டியிருந்தார். மாரி செல்வராஜ் இயக்கிய படங்களிலேயே மாமன்னன் அதிக வசூலை பெற்றது. அதோடு, உதயநிதிக்கு இப்படம் முக்கிய படமாக அமைந்தது.


இந்த படத்திற்கு பின் சியான் விக்ரமின் மகன் துருவை வைத்து பைசன் காளமாடன் என்கிற படத்தை இயக்கினார் மாரி. இந்த படம் தென் மாநிலத்தை சேர்ந்த ஒரு கபடி வீரர் பற்றிய உண்மை கதையாகும். இந்த படத்திற்காக பல மாதங்கள் கபடி பயிற்சி எடுத்தார் துருவ். தற்போது படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. வருகிற தீபாவளிக்கு இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமை 15 கோடி, ஓடிடி உரிமை 18 கோடி, தொலைக்காட்சி உரிமை 5 கோடி, வெளிநாட்டு வினியோக உரிமை 2 கோடி என பட ரிலீஸுக்கு முன்பே 40 கோடி வியாபாரத்தை இப்படம் தொட்டிருக்கிறது. இது இல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் ஹிந்தி உரிமை என எல்லாம் சேர்த்தால் இன்னும் பல கோடிகளை இப்படம் வசூலிக்கும் என்கிறார்கள். இது போக தியேட்டர்களில் கிடைக்கும் வசூலும் இருக்கிறது. எப்படியும் இப்படம் 100 கோடி வசூலை தாண்டும் என கணிக்கப்படுகிறது.

Next Story