குபேரா ரிசல்ட்!.. 2 நடிகர்களும் ஒரு நடிகையும் செம குஷி!.. புளூசட்ட மாறன் நக்கல்!...

By :  MURUGAN
Published On 2025-06-21 08:53 IST   |   Updated On 2025-06-21 08:53:00 IST

சினிமாவில் போட்டி, பொறாமை அதிகம். ஒரு நடிகரின் வெற்றியை பார்த்து சிலர் பொறாமைப்படுவார்கள். அதேபோல், ஒரு நடிகர் தோல்வி படம் கொடுத்தால் பார்ட்டி கொடுக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். ஏனெனில், இங்கே எல்லா நடிகர்களுக்கும் போட்டி நடிகர்கள் இருப்பார்கள். எல்லாவற்றையும் போட்டியாகவே பார்ப்பார்கள். ரஜினியின் பாபா படம் தோல்வி அடைந்த போது ஒரு முன்னணி நடிகர் பார்ட்டி கொடுத்ததாக செய்திகள் வெளியானது.

சினிமா உலகில் இது சகஜம். எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ் என போட்டிகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. யாரின் காலை யார் வாரலாம் என எதிர்பார்த்து காத்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால், நேரில் சந்தித்தால் நல்லவர்கள் போல கட்டியணைத்து அன்பை காட்டுவார்கள்.


இந்நிலையில்தான் தனுஷின் குபேரா படம் நேற்று வெளியானது. தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். படம் நன்றாக இருப்பதாகவும், தனுஷ் சிறப்பாக நடித்திருப்பதாகவும் முதலில் விமர்சனம் வந்தது.

அதன்பின் படத்தின் நீளம் தொய்வை ஏற்படுத்துவதாகவும், இரண்டாம் பாதியில் திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை என்றும், படத்தின் கிளைமேக்ஸ் சரியாக முடிக்கப்படவில்லை எனவும் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். வருகிற விமர்சனங்களை பார்க்கும் போது இப்படம் தனுஷுக்கு சூப்பர் ஹிட்டாக அமையும் என தோன்றவில்லை. ஏனெனில் குபேரா ஒரு கமர்சியல் மசாலா படம் இல்லை.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் டிவிட்டர் பக்கத்தில் ‘குபேரா பட ரிப்போர்ட்டை கேட்டு ‌Nose piercing நாயகியும், Opposite Swimming மற்றும் Burned out forest நாயகர்களும் குஷியாக இருக்கிறார்கள். இப்படிக்கு காயாங்குளம் கொச்சுண்ணி.. பழைய பத்திரிக்கையாளர்’ என பதிவிட்டிருக்கிறார். புளூசட்ட மாறன் யாரை சொல்கிறர் என ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

Nose piercing - மூக்குத்தி அம்மன் - நயன்தாரா

Opposite Swimming - எதிர் நீச்சல் - சிவகார்த்திகேயன்

Burned out forest - வெந்து தணிந்தது காடு - சிம்பு

என பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News