துப்பாக்கியுடன் ஜேசன் சஞ்சய்!.. அப்பா மாதிரியே ஸ்டைலா சுடுறாரே!.. வைரல் வீடியோ....

Jason Sanjay: தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்து வேட்டைக்காரன் படத்தில் அவருடன் சேர்ந்து நடனமாடியிருப்பார். அப்பாவை போல விஜயும் பின்னாளில் நடிகராக மாறுவார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ இயக்குனர அவதாரம் எடுத்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களாவே சஞ்சய் அப்பா விஜயுடன் இல்லை. அம்மாவோடு லண்டனில் இருக்கிறார். அங்கு சினிமா இயக்கம் பற்றியை படித்தார். அதன்பின் நண்பர்களோடு சேர்ந்து குறும்படங்கள் எடுப்பதிலும் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் சினிமா எடுக்கும் ஆசையும் அவருக்கு வந்தது. ஒரு கதையை ரெடி பண்ணி லைக்கா நிறுவனத்தில் சொல்லி சம்மதம் வாங்கினார்.

சங்கீதா விஜயின் அப்பா லைக்கா சுபாஷ்கரனுக்கு நெருக்கம் என்பதால் இது நடந்திருக்கிறது. 2 வருடங்களுக்கு முன்பே இதுபற்றிய அறிவிப்பு வெளியானது. படத்தின் ஷூட்டிங் துவங்கப்படாமலேயே இருந்தது. அதன்பின் இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிப்பது உறுதியானது. சமீபத்தில் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியானது.
அதன்பின்னரே ஷூட்டிங் நடப்பது தெரியவந்தது. வருகிற ஆகஸ்டு 15ம் தேதி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், அப்பா விஜயை போலவே துப்பாக்கியை ஜேசன் ஹேண்டில் செய்யும் வீடியோ வெளியானது. பேப்பரில் வரையப்பட்ட ஓவியம் ஒன்றை பார்த்து அவர் சுடும் வீடியோ விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதைப்பார்க்கும் போது விஜயின் துப்பாக்கி, பீஸ்ட் மற்றும் கோட் படங்களெல்லாம் நினைவுக்கு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஜேசன் இயக்கத்தை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வரவேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.