தக் லைப் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்த கமல்!.. என்னப்பா சொல்றீங்க!...

By :  MURUGAN
Published On 2025-06-03 12:24 IST   |   Updated On 2025-06-03 12:24:00 IST

Thug life movie: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் தக் லைப். 37 வருடங்களுக்கு பின் கமலும், மணிரத்னமும் இணைந்திருப்பதாலும், முதன் முறையாக கமலுடன் சிம்பு இணைந்திருப்பதாலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

அதுவும் இந்த படத்தில் கமலுக்கு சிம்புதான் வில்லன் என்கிற செய்தி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் என்கவுண்டரில் இருந்து தன்னை காப்பாற்றிய சிறுவன் அமரை (சிம்பு) தன் மகன் போல தத்தெடுத்து வளர்க்கிறார் ரங்கராய சக்திவேல் (கமல்). அதோடு, தனது மகளையே அவருக்கு திருமணமும் செய்து வைக்கிறார்.

ஆனால், கமலின் இடத்தை பிடிக்க நினைக்கும் சிம்பு அவரை கொலை செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், கமல் அதிலிருந்து தப்பிவிடுகிறார். அதன்பின் அவர் எப்படி திரும்பி வந்து சிம்புவை பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவிலும் இடம் பெற்றிருந்தது.


அதோடு, இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியிருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. குறிப்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடலை பலரையும் ரிப்பீட் மோடில் கேட்டு ரசித்து வருகிறார்கள். ஆனால், படத்தில் இப்பாடலை பாடகி தீ பாடியிருக்கிறார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு 40 கோடி சம்பளம் எனவும், திரிஷாவுக்கு 12 கோடி சம்பளம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கமலுக்கும், மணிரத்னத்திற்கும் சம்பளம் இல்லை. ஏனெனில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்துதான் இப்படத்தை தயாரித்துள்ளனர். எனவே, வரும் லாபத்தை அவர்கள் இருவரும் பங்கிட்டு கொள்வார்கள்.

இதற்கிடையில், கன்னட மொழி பற்றி கமல் பேசியதற்கு கர்நாடகாவில் உள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகும் என அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். கமலோ மன்னிப்பு கேட்காமல் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

Tags:    

Similar News