கன்னட மொழி சர்ச்சை!.. கமலுக்கு இவ்ளோ கோடி நஷ்டமாம்!.. தக் லைப் அப்டேட்!...
Thuglife: தக் லைப் படத்தின் புரமோஷன் விழாவில் கமல் பேசியதை சில கன்னட அமைப்புகள் அரசியலாக மாற்றிவிட்டது. புரமோஷன் நிகழ்ச்சிக்கு கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் வந்திருந்தார். அவரை பற்றி பேசிய கமல் திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற ஆகியவை தமிழ் மொழியில் இருந்தே உருவானது என பேசினார்.
இதை சில கன்னட அமைப்புகள் கையில் எடுத்து எதிர்ப்பை தெரிவித்தன. தமிழில் சினிமா நடிகர்கள் எப்போது கர்நாடகம் மற்றும் கன்னட மொழிக்கு எதிராக பேசுகிறார்கள் என அவர்கள் காத்துக்கொண்டே இருப்பார்கள். யாராவது பேசினார்ல் உடனே ‘மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் உங்கள் படம் இங்கே ரிலீஸாகாது’ என மிரட்டுவார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு காவிரி நீர் பங்கீடு பற்றி கர்நாடகாவுக்கு எதிரான கருத்தை சத்யராஜ் சொல்லி இருந்தார். பாகுபலி படம் வெளியான நேரம் ‘சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் படம் ரிலீஸ் ஆகாது’ என சில கன்னட அமைப்புகள் மிரட்டினார்கள். எனவே, வேறுவழியின்றி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டார் சத்யராஜ். ரஜினியும் அப்படி ஒருமுறை படம் ரிலீஸாவதற்காக மன்னிப்பு கேட்டார்.
இப்போது கமலை மிரட்டி வருகிறார்கள். ‘ஆனால், நான் சொன்னது அன்பின் வெளிப்பாடுதான். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. மொழி பற்றி பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. மொழி ஆய்வாளர்கள் சொன்னதைத்தான் நான் சொன்னேன்’ என அவர் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், கமலுக்கு கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார். ‘கமல் சார் தவறாக எதுவும் சொல்லமாட்டார். அவர் விளக்கம் சொல்வார்’ என சொல்லியிருக்கிறார்.
இதற்கிடையில் கமல் நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைப் படம் ரிலீஸாகாது என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு அறிவித்திருக்கிறார். தமிழை கன்னட மொழியின் தாய் என சொல்வதை ஏற்க முடியாது. கமல் என்ன விளக்கம் சொன்னாலும் ஏற்க மாட்டோம். கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்.
ஆனால், கமல் இதை கண்டுகொள்ளவில்லை. தக் லைப் படம் கர்நாடகாவில் 20 கோடி லாபத்தை கொடுக்கும். அது இல்லையென்றாலும் பரவாயில்லை.. மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்கிற முடிவில் கமல் இருக்கிறாராம். ஆந்திரா, மலேசியா, துபாய் என தக் லைப் படத்திற்கான புரமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறாராம்.