சட்ட கருப்பு... வாயில சுருட்டு.. கருப்பு ரெடி.. கலக்கலான லுக்கில் சூர்யா!.. புது போஸ்டர் தெறி!...

Karuppu : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம்தான் கருப்பு. இந்த படத்தில் வக்கீல் மற்றும் கருப்பசாமி என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் சூர்யா. சூர்யா கடவுளாக நடிக்கும் முதல் திரைப்படம் இது என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் திரிஷா, நட்டி நடராஜ், லப்பர் பந்து புகழ் ஸ்வசிகா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். வருகிற தீபாவளிக்கு கருப்பு படம் வெளியாகவுள்ளது. சூர்யாவுக்கு கடந்த பல வருடங்களாகவே ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. அவரின் நடிப்பில் வெளியான கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி ரசிகர்களை ஏமாற்றியது. இப்படத்தில் அதிகப்படியாக நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது.
ஒருபக்கம் சூர்யாவை பிடிக்காத குரூப்பும் களத்தில் இறங்கி கலந்து கட்டி அடித்தார்கள். எனவே, இப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. அதன்பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில்தான் அடுத்து கருப்பு படம் வெளியாகவுள்ளது.
சூர்யாவுக்கு ஜூலை 23ம் தேதியான நாளை பிறந்தநாள் என்பதால் படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இது சூர்யா ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஒரு புது போஸ்டரை வெளியிட்டு நாளை காலை 10 மணிக்கு கருப்பு படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

சூர்யா கருப்பு சட்டை, வேட்டி, கருப்பு கண்ணாடி அணிந்து வாயில் சுருட்டோடு ஸ்டைலாக நடந்து வருவது போல போஸ்டரை டிசைன் செய்திருக்கிறார்கள். காட்சியை பார்க்கும் போதே இது பாடல் காட்சி என்பது தெரிகிறது.