பன்ச் வசனம் பேசியும் பஞ்சர் ஆயிடுச்சே!.. காத்து வாங்கும் குபேரா ஃப்ரி புக்கிங்!. அட பாவமே!..

By :  MURUGAN
Published On 2025-06-19 12:49 IST   |   Updated On 2025-06-19 12:53:00 IST

Kubera: நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்கான ரசிகர் வட்டாரம் என்பது பெரிதாக இருந்தாலும் சினிமா என்பது வியாபாரம்தான். இவ்வளவு பணத்தை போட்டு இவ்வளவு வசூல் என்பதுதான் தயாரிப்பாளரின் கணக்கு. அதற்காகத்தான் பிரபலமான நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து புரமோஷன் செய்கிறார்கள். புரமோஷனுக்கே பல கோடிகள் செய்வது இப்போது அதிகரித்துவிட்டது.

சூர்யாவின் நடிப்பில் உருவான கங்குவா, ரெட்ரோ, மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடித்து உருவான தக் லைப் போன்ற எல்லா படங்களுக்கும் சில கோடிகள் செலவு செய்து புரமோஷன் செய்தார்கள். புரமோஷன்களில் படத்தை பற்றி ஆஹோ ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். அந்த ரேஞ்சுக்கு படம் இல்லையெனில் அது ட்ரோலில் சிக்குகிறது.


கங்குவா படம் 2 ஆயிரம் கோடி வசூல் பண்ணும் என சொன்னார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. படம் வெளியான பின் எல்லோரும் அதை ட்ரோல் செய்தார்கள். தக் லைப் புரமோஷனில் ‘இந்த படம் நாயகனை தாண்டும்’ என கமல் சொன்னார். ஆனால், படம் வெளியான பின் எல்லோரும் ட்ரோல் செய்தார்கள். மணிரத்னம் இதுவரை இவ்வளவு அவமானங்களை சந்தித்திருக்கவே மாட்டார். அவ்வளவு மீம்ஸ்கள் வந்தது.

இந்நிலையில், தனுஷின் குபேரா படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய தனுஷ் படத்தை பற்றி பேசாமல் தன்னுடைய ஹேட்டர்ஸ்கள் பற்றியே அதிகம் பேசினார்.

என் ரசிகர்கள் இருக்கும் வரை என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் போய்க்கொண்டே இருப்பேன் என பன்ச் வசனமெல்லாம் பேசினார். இந்நிலையில், குபேரா படத்தின் ஆன்லைன்/ஃப்ரி புக்கிங் டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதாக பலரும் இணையத்தில் சொல்லி வருகிறார்கள். சென்னையில் ரோகிணி, மாயாஜால் போன்ற தியேட்டர்களில் ஒரு காட்சி கூட ஹவுஸ்புல் ஆகவில்லை. இது தொடர்பான புக்மை ஷோ ஸ்கீரின்ஷாட்டையும் சிலர் பகிர்ந்திருக்கிறார்கள்.


 இப்படியே போனால் படம் வசூலை பெறுமா என்பது தெரியவில்லை. அதேநேரம் படம் நன்றாக இருக்கிறது என்கிற விமர்சனம் வந்துவிட்டால் தியேட்டரை நோக்கி ரசிகர்கள் செல்வார்கள். ஆன்லைன் புக்கிங்கிலும் டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனை ஆகும் என்பது தெரிந்ததுதான்.

Tags:    

Similar News