மதராஸி படத்தின் ஆடியோ லான்ச்!.. செம பிளான் போட்ருக்காங்க!. ஆனா அதுல ஒரு சிக்கல்!..

by MURUGAN |
madharasi
X

Madharasi: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம்தான் மதராஸி. இந்த படத்தில் ருக்மணி வஸந்த், வித்யூத், பிஜு மேனன், விக்ராந்த், சபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அமரன் ஹிட்டுக்கு பின் பெரிய இயக்குனர்களுக்கு வலை விரித்த சிவகார்த்திகேயன் முருகதாஸை அவரே தொடர்பு கொண்டு கேட்டு நடித்த படம் இது என சொல்லப்படுகிறது.

அதோடு விஜயை வைத்து துப்பாக்கி கொடுத்தவர் என்பதால் நமக்கும் அப்படி ஒரு படம் கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். பக்கா ஆக்சன் படமாக மதராஸி உருவாகியிருக்கிறது. துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத்தே இந்த படத்திலும் நடித்திருக்கிறார்.


இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதுதான் சிவகார்த்திகேயனுக்கு அமரன் பட வாய்ப்பு வந்தது. படம் பாதி முடிந்தநிலையில் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து சிக்கந்தர் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. எனவே, அவர் அங்கே போய்விட அமரன் படத்தில் நடிக்கப்போனார் சிவகார்த்திகேயன். தற்போது மதராஸி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கான இசை வெளியிட்டு விழாவை லண்டனில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், ஆகஸ்ட் மாதம் கிங்டம், கூலி போன்ற படங்கள் ரிலீஸ் என்பதால் பிஸியாக இருக்கிறார் அனிருத். எனவே, அவர் சொல்லும் தேதியில் மதராஸி இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Next Story