ஒரு ஆல்பம் போட்டா மியூசிக் டைரக்டர்!.. வசமா மாட்டப் போறாங்க.. தாக்கிப் பேசிய பரணி

தமிழ் சினிமாவில் அண்டர்ரேடட் இசையமைப்பாளர்களில் ஒருவர் பரணி. காதுகளுக்கு தேன் சொட்ட சொட்ட தேனிசை பாடல்கள் கொடுத்தும் திரைத்துறையில் தனக்கான அங்கீகாரம் என்பது கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் வருத்தமும் இவருக்கு இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்ட பரணி தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்ததன் மூலம் தமிழக மக்களிடையே கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக உருவெடுத்தார்.
ஆரம்ப காலங்களில் என்னதான் இவரின் இசை மக்களிடையே வரவேற்பை பெற்றாலும் காலப்போக்கில் இவர் அடையாளம் தெரியாமல் போனார். இவ்வளவு அருமையான பாடல்களை கொடுத்தும் அடுத்த இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் வரிசையில் வர வேண்டிய இவர் காணாமல் போனதற்கான காரணத்தை அவரே ஒரு பேட்டியில் கூறுகிறார். மேலும் இசையமைப்பாளர் பரணி கூறியதாவது, ”இன்றைய இளசுகளின் இதயத்தை பிடிப்பதற்கு இளம் இசையமைப்பாளரின் வருகை அதிகரித்துள்ளது.
இன்று எனக்கும் 50 வயதை கடந்தாலும் நானும் 20 வயது இளைஞனைப் போல இன்னும் சுறுசுறுப்பாக தான் இருக்கிறேன். இன்றைய இளசுகளின் இதயங்களை வெல்ல என்னிடமும் பாட்டுகள் கம்போஸ் செய்து தயாராக இருக்கிறது. இன்று ரகுமான், அனிருத் என்ன மியூசிக்கல் சிஸ்டம்ஸ் வைத்திருக்கிறார்களோ அதைத்தான் நானும் வைத்துள்ளேன். சிஸ்டமில் மாற்றம் இல்லை. சினிமா மார்க்கெட் யாருக்கு இருக்கிறது என்பதில் தான் இருக்கிறது. எனக்கு ஒரு பேக்ரவுண்ட் இருந்தால் உதாரணத்துக்கு விஜய் என்னிடம் இருந்தால் இன்று நான் தான் நம்பர் ஒன் இசையமைப்பாளர்.

யாராவது ஒரு நடிகர் என் பேக்ரவுண்டில் இருக்க வேண்டும். தனியாக ஒரு பாடலை உருவாக்கி ஹிட்டுக் கொடுப்பதில் ஒரு மேட்டரே இல்லை. ஆனால் மார்க்கெட்டில் நான் தெரிய வேண்டும் என்றால் அதற்கு ஒரு நடிகரின் உதவி எனக்கு தேவைப்படுகிறது. இன்னைக்கு ஒரு ஆல்பம் ஹிட்டு கொடுத்துட்டா சினிமாவில் ஜெயித்து விட முடியாது. அந்த பிளேஸ்மெண்ட் வேற.”
நான் கஷ்டப்பட்டு அலஞ்சி தெரிஞ்சு மியூசிக் டைரக்டர் வாய்ப்பு பெற்றேன். இன்னைக்கு ஒரு ஆல்பம் செய்து ஒரு படம் பெற்று விடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். படம் கிடைத்தப்பிறகு அது அவ்வளவு சுலபம் கிடையாது. அதையும் மீறி ஜெயித்தால் அதைவிட சந்தோஷம் எனக்கு இல்லை”. இவ்வாறு இசையமைப்பாளர் பரணி இன்றைய காலத்தை இசையமைப்பாளர்களின் வரவை விமர்சித்துள்ளார்.