ஜெயிலர் 2-வுக்கு பின் ரஜினியை இயக்கப்போவது இவரா?!.. பரபர அப்டேட்...
Rajinkanth: ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படம் ஹிட் மூலம் எப்போதுமே நான்தான் சூப்பர்ஸ்டார் என ரஜினி நிரூபித்து காட்டினர். இந்த படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதுவரை எந்த விஜய் படமும் இவ்வளவு வசூல் செய்தது இல்லை என சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள கூலி படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முதல் காரணம் லோகேஷ் கனகராஜ் என்றாலும் இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, அமீர்கான், சத்தியராஜ் போன்ற பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
கூலி படம் ரிலீஸுக்கு முன்பே 500 கோடி வியாபாரத்தை தொட்டிருக்கிறது. எனவே, தியேட்டர் வசூல் எல்லாம் சேர்த்தால் கண்டிப்பாக இப்படம் 1000 கோடி வசூலை தாண்டும் என்கிறார்கள். அதை குறி வைத்தே சன் பிக்சர்ஸ் நிறுவனம் புரமோஷனும் செய்து வருகிறார்கள். இந்த படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது.
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்த படத்திலும் தெலுங்கிலிருந்து பாலையா உள்ளிட்ட சில நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில்தான் ஜெயிலர் 2-வுக்கு பின் மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது. நித்திலன் சொன்ன கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாகவும், முழுக்கதையையும் தயார் பண்ணுமாறு ரஜினி சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் டேக் ஆப் ஆனால் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.